இனிமே குழாயை திறந்தா இயற்கை எரிவாயு வருமாம்! சென்னையில் சூப்பர் திட்டம்! எப்படி பலன் அளிக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோக இணைப்புகளுக்கு நுகர்வோர்கள் பெரும் வரவேற்பளித்துள்ளதாக கேஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து தலைநகர் சென்னையில் இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த நான்கு மாதங்களுக்குள்ளாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோக இணைப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இணைப்பை பெறுவதற்கு அண்ணாநகர் மற்றும் கேளம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் போட்டிப்போட்டுக்கொண்டுள்ளன.

முதல் முயற்சி

முதல் முயற்சி

தமிழ்நாட்டில் முதன் முறையாக கடந்த ஜூன் 17ம் தேதி நாகை மாவட்டம் சியாத்தை மங்கம் கிராமத்தில் 14 வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட்டது. இது குறித்து சிலிண்டரைவிடக் குழாய் மூலம் எரிவாயு கிடைப்பது வசதியாக இருக்கிறது என்று பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். சிலிண்டர் மூலம் ரூ.1,000 செலவு என்றால், குழாய் மூலம் ரூ.800 - 850 மட்டுமே செலவாகும். ஓஎன்ஜிசியால் உற்பத்தி செய்யப்பட்டு, கெயில் இந்தியா நிறுவனம் - டாரென்ட் தனியார் நிறுவனம் ஆகியவற்றால் இந்த எரிவாயு விநியோகிக்கப்படுகிறது.

சென்னை

சென்னை

இதனையடுத்து இந்த திட்டம் சென்னையில் அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் மற்றும் கேளம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த வசதி உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான குழாய் அமைப்பது என பல்வேறு பணிகள் இரு இடங்களிலும் வேகமாக நடைபெற்று வருகிறது. தண்ணீர் குழாயை போல வீட்டுக்கு வீடு எரிவாயு கொண்டு சென்று சேர்ப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களையொட்டியுள்ள பகுதிகளில் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளை இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் முன்னெடுத்து வருகிறது. இந்த பணி தற்போது முடிவுறும் நிலையில் உள்ளது. இது முக்கிய நகரங்களை மட்டுமல்லாது, கிளைக் குழாய்களையும் பதித்து இதர பல நகரங்களையும் இணைக்க முயன்று வருகிறது. இதன்படி நாகப்பட்டினம் முதல் மதுரை வரை, தூத்துக்குடி முதல் ராமநாதபுரம் வரை, பெங்களூரு, கோலார், சித்தூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட நகரங்கள் பலவும் இணைக்கப்பட்டுள்ளன.

இதுவரை

இதுவரை

இதனையடுத்து தற்போது வரை நாகப்பட்டினத்தில் 30 வீடுகளுக்கும், வேலூரில் 7 வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்படும் இணைப்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வழங்கப்படும் இணைப்புகளைவிட தனி வீடுகளுக்கு வழங்கப்படும் இணைப்புகளுக்கு அதிகம் செலவாகும் என கேஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், எப்படியாயினும் நுகர்வோர்கள் பயன்படுத்தும் எரிவாயு அளவிற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல இரண்டாவது இணைப்பை பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

33 லட்சம் இணைப்புகள்

33 லட்சம் இணைப்புகள்

இந்த மாபெரும் திட்டம் மூலம் நாகப்பட்டினம், சென்னை என இரண்டு மாவட்டங்களில் அடுத்த 8 ஆண்டுகளில் சுமார் 33 லட்சம் பைப் லைன் இணைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதன் முறையாக நாகை மாவட்டம் சியாத்தை மங்கம் கிராம கவுன்சிலர் வீட்டில்தான் கொடுக்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், "இந்த இணைப்பு பாதுகாப்பானதாக உள்ளதாக குடும்பத்தினர் கருதுகின்றனர்" என்று கூறியுள்ளார்.

 மாற்றம்

மாற்றம்

சென்னையை பொறுத்தவரையில் ஏற்கெனவே இரு இடங்களில் இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், கேளம்பாக்கத்தில் ஸ்டேஷன் அமைக்க நிலம் தேடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிகளையடுத்து குடியிருப்புகளுக்கு பைப் லைன்களை கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் டென்டர் முறையில் விடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோக இணைப்புகள் பெறப்பட்டால் ஸ்டவ் அமைப்பு மாற்றப்பட வேண்டும். உங்கள் பகுதியில் இதற்கான பைப் லைன் பணிகள் முடிந்துவிட்டிருப்பின் நீங்கள் அப்ளை செய்த அடுத்த நாளில் உங்களுக்கு இணைப்பு கிடைக்கப்படும். என்ன மக்களே இணைப்பை பெற தயாரா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+