100%.. இதுதான் தமிழ்நாட்டு மாடல்! மற்ற மாநிலங்கள் பார்த்து கற்க வேண்டும்.. வியக்க வைத்த புள்ளி விவரம்!
சென்னை: இந்தியாவில் அதிக முன்னேற்றம் அடைந்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இந்தியாவில் பெரும்பாலும் தென்னிந்திய மாநிலங்கள்தான் வளர்ச்சி குறியீடுகளில் அதிகம் முன்னேற்றம் அடைந்து உள்ளன.
அதில் தமிழ்நாடு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டில் உயர்கல்வி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை 51.4 சதவிகிதமாக உள்ளது. அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளை விட தமிழ்நாட்டில்தான் மாணவர்கள் அதிக அளவில் உயர் கல்வி பயில்கிறார்கள்.
இந்தியாவின் GER அதாவது உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை வெறும் 27.1% ஆக உள்ளது. இந்த விஷயத்தில் மட்டுமின்றி பல்வேறு குறியீடுகளில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்து உள்ளது.

பள்ளிகள்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் எல்லா பள்ளிகளிலும் மின்சார இணைப்புகள் உள்ளன. அதாவது அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் எல்லாம் சேர்த்து மொத்தம் 100 சதவிகித பள்ளிகளில் மின்சார இணைப்புகள் உள்ளன. இன்னொரு மாநிலமான கோவாவில் 100 சதவிகிதம் மின்சாரஇணைப்பு பள்ளிகளில் உள்ளது. குஜராத், பஞ்சாப்பில் 99.9 சதவிகித பள்ளிகளில் மின்சார இணைப்பு உள்ளது. கேரளாவில் 99.5 பள்ளிகளில் மின்சார இணைப்பு உள்ளது. source: @indiainpixels

கல்லூரிகள்
பள்ளிகள் மட்டுமல்ல கல்லூரிகளிலும் தமிழ்நாடுதான் முன்னிலையில் உள்ளது. அதன்படி இந்தியாவில் சராசரியாக 1 லட்சம் மாணவர்களுக்கு 198 பொறியியல் இடங்கள்தான் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் 1 லட்சம் மாணவர்களுக்கு 705 இடங்கள் உள்ளன. தெலுங்கானாவில் 517 இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் கல்லூரிகளின் வளர்ச்சியை குறிக்கும் வகையில் இத்தனை சீட்டுகள் உள்ளன. அதோடு நுழைவு தேர்வு நீக்கப்பட்டதும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. source: @indiainpixels

பெண் குழந்தைகள்
கல்வியில் மட்டுமின்றி பாலின சமத்துவத்திலும் தமிழ்நாடுதான் நிலையில் இருக்கிறது. உதாரணமாக தமிழ்நாட்டில்தான் குடும்பத்தினர் அதிக அளவு பெண் குழந்தைகளை விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் இது 8.9 % சதவிகிதமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் எல்லாம் இது 8 சதவிகிதத்திற்கும் கீழ்தான் இருக்கிறது. குஜராத்தில் 2.6, உத்தர பிரதேசத்தில் 1.4 சதவிகித மக்கள் மட்டுமே பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். தமிழ்நாடு தவிர சிறிய மாநிலங்களான மேகாலயா போன்ற மாநிலங்களிலும் மக்கள் பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். source: @indiainpixels

சுத்தம்
அதேபோல் இந்தியாவில் பான் பாக்கு போட்டு எச்சில் துப்பும் நபர்கள் குறைவாக இருப்பது தமிழ்நாட்டிலும், ராஜஸ்தானிலும்தான். தமிழ்நாட்டில் இவர்கள் எண்ணிக்கை 1.28 என்ற அளவில் உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் பான் பாக்கு எச்சில்களை வைத்து 1.28 நீச்சல் குளங்களை நிரப்பலாம். ராஜஸ்தானில் இது 0.7 ஆக உள்ளது. உத்தர பிரதேசத்தில் 46.37 ஆக உள்ளது. தமிழ்நாடு இதிலும் முன்னேற்றம் கண்டு உள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் பல பான் பாக்கு எச்சில் காரணமாக அசுத்தமாகி இருப்பதை இந்த டேட்டா உணர்த்துகிறது. source: @indiainpixels
-
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள் பேங்க் அக்கவுண்டில் ரூ.1000.. புத்தகப்பை, ஷூ வாங்க புதிய திட்டம் -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
சார் உங்களுக்கு ஒரு சல்யூட்! நள்ளிரவில் ரயில் நிலையத்தில் தவித்த பெண்! யோசிக்காமல் உதவிய ராணுவ வீரர் -
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்












Click it and Unblock the Notifications