Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யுபிஎஸ்சி தேர்வில் அசத்திய தமிழக மாணவர்கள்! கை மேல் பலன் கொடுத்த நான் முதல்வன் திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிகவும் கடினமாக தேர்வாக கருதப்படும் யுபிஎஸ்சி பிரதான தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மட்டுமல்லாது தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அகில இந்திய பணிகளுக்கான அதிகாரிகளை தேர்வு செய்ய யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகியிருக்கின்றனர்.

Tamil Nadu UPSC Naan Mudhalvan scheme

யுபிஎஸ்சி தேர்வு

இந்த தேர்வு மொத்தம் மூன்று கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டம் முதல் நிலை தேர்வாகவும், இரண்டாம் கட்டம் பிரதான தேர்வாகவும் இறுதியாக நேர்காணல் தேர்வும் நடத்தப்படும்.

நடப்பாண்டுக்கான 979 காலிப்பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியாகியிருந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தது. நாடு முழுவதும் 2,736 பேர் தேர்ச்சிப்பெற்றிருந்தனர். இதில் 155 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சியடைந்திருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 13.9% அதிகமாகும்.

தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம்

ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது தேர்ச்சி விகிதம் 5.67% ஆகும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் நான் முதல்வன் திட்டதின் கீழ் பயிற்சி பெற்றவர்களில் 85 பேர் தேர்ச்சியடைந்திருக்கின்றனர் என்பதுதான். கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் 48 பேர் தேர்ச்சியடைந்திருந்த நிலையில், இந்த முறை 37 பேர் கூடுதலாக தேர்ச்சியடைந்திருக்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 35.29% ஆக இருந்தது. இந்த ஆண்டு 54.84% ஆக இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

இது குறித்து பாராட்டு தெரிவித்திருக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "2025 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் (UPSC Mains 2025) தமிழ்நாடு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 155 தேர்வர்கள் யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தச் சாதனை படைத்த அனைத்து தேர்வர்களும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொலைநோக்குத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட உதவித்தொகை மற்றும் நிதி உதவியால் பயனடைந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்.

tamilnadu

அதிகரித்த தேர்ச்சி விகிதம்

இந்த ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 87 பேர், தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் (AICSCC) பயிற்சி பெற்றவர்கள் ஆவர். இந்த குறிப்பிடத்தக்க வெற்றிகள், ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் இருந்து 100 குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்குவதற்கான இலக்கை நோக்கி மாநிலம் நிலையான முன்னேற்றம் அடைவது பிரதிபலிக்கிறது. இந்த முயற்சிக்குப் பாடுபட்ட AICSCC மற்றும் "நான் முதல்வன்" திட்டக் குழுவினருக்கு சிறப்புப் பாராட்டுகள். வெற்றி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் வரவிருக்கும் நேர்காணலுக்கு என் நல்வாழ்த்துகள்" என தெரிவித்திருக்கிறார்.

நான் முதல்வன் திட்டம்

நான் முதல்வன் திட்டத்தில், யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில், 2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் தேர்வு செய்யப்படும் 1000 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ. 7500 வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குத் தயாராவதற்காக ரூ. 25000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதோடு அவர்களது செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தோடும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ். (IAS) ஆர்வலர்களுக்கான இந்த மாதாந்திர ஊக்கத்தொகைத் திட்டமானது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக, ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அகில இந்திய போட்டித் தேர்வுகளில் மீண்டும் தமிழ்நாட்டை முன்னிலைக்குக் கொண்டுவருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+