பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

விஜய் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு தமிழக விவசாயிகளுக்கு பெரிய நிவாரணமாக, கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை உள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறைந்த நிலம் கொண்ட விவசாயிகள் நேரடி பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு அரசு அறிவிக்கும் பயிர் கடன் தள்ளுபடிதான் ஒரே நிவாரணம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் உலக அரசியல் மாற்றங்களே, விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

Tamil Nadu Waives

தற்போது அமெரிக்காவும் ஈரானும் இடையே உருவாகியிருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம், இந்திய விவசாயத் துறைக்கு அப்படிப்பட்ட ஒரு மறைமுக நன்மையைத் தரும் சூழலை உருவாக்கியுள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் உர நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படலாம் என்ற நம்பிக்கைதான்.

ஹார்முஸ் திறந்தால் உரத் துறைக்கு ஏன் மகிழ்ச்சி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவும் ஈரானும் இடையே வளைகுடா பிராந்தியத்தில் நடந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் ஆரம்பகட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அறிவித்துள்ளார். இதன் ஒரு முக்கிய அம்சமாக, ஹார்முஸ் நீரிணை இந்த வார இறுதியில் முழுமையாக மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் மூலப்பொருள் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாகவே இந்தியாவுக்கு உர உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்கள் வருகின்றன. குறிப்பாக அமோனியா மற்றும் கந்தகம் (Sulphur) போன்றவின் வரவு இந்த வழித்தடத்தை மட்டுமே நம்பியுள்ளது.

விவசாயிகளுக்கு நேரடியாக என்ன பலன்?

உர உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அமோனியாவின் 78.8 சதவீதமும், Sulphur-ன் 95.9 சதவீதமும் ஹார்முஸ் வழித்தடத்தில் இருக்கும் வளைகுடா நாடுகளில் இருந்தே இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் உர உற்பத்திச் செலவை அதிகரிக்கும். இதனால் உர விலைகள் உயர்ந்து, விவசாயிகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

ஆனால் தற்போது விநியோகத் தடைகள் குறையும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளதால், உர நிறுவனங்களின் உற்பத்திச் செலவு குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நேரடியாக விவசாயிகளுக்கும் சாதகமாக அமையும்.

பங்குச்சந்தையில் உர நிறுவனங்கள் பறப்பு

இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள உரத் துறை பங்குகள் செவ்வாய்க்கிழமை கணிசமான ஏற்றத்தைப் பதிவு செய்தன. The Fertilisers and Chemicals Travancore (FACT) பங்கு 14 சதவீதம் வரை உயர்ந்தது. Chambal Fertilisers 5 சதவீதமும், Rashtriya Chemicals and Fertilizers 4 சதவீதமும், Gujarat State Fertilizers & Chemicals 3 சதவீதமும் உயர்ந்தன.

இது முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், உர விநியோகம் சீராகும் என்ற நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

ஹார்முஸ் பகுதியில் சிக்கிய 16 கப்பல்கள்

மத்திய உரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவை நோக்கி உரங்களை ஏற்றிக்கொண்டு வந்த 16 கப்பல்கள் தற்போது ஹார்முஸ் நீரிணை பகுதியில் சிக்கியுள்ளன. இந்த கப்பல்கள் விரைவில் இயக்கத்தைத் தொடங்கினால், உர சப்ளை இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பு அதிகரிக்கும்.

உலகின் மிகப்பெரிய யூரியா நுகர்வோர் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு இது மிக முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக வரவிருக்கும் கரீப் பருவ சாகுபடிக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க இந்த மாற்றம் உதவக்கூடும்.

விவசாயத் துறைக்கு வந்திருக்கும் நல்ல செய்தி!

பயிர் கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கலாம். ஆனால் உர உற்பத்தி செலவு குறைந்து, விநியோகம் சீராகி, சாகுபடிக்குத் தேவையான பொருட்கள் தடையின்றி கிடைப்பதும், மலிவான விலையில் கிடைப்பதும் விவசாயத் துறைக்கு நீண்டகால நன்மையை உருவாக்கும்.

அந்த வகையில், ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படலாம் என்ற தகவல், இந்திய உரத் துறைக்கும், அதன் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும் தற்போது ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+