தமிழகத்தில் ORSL, ORS FIT கரைசல்கள் விற்பனைக்கு தடை! மருந்து கடைகளில் பறிமுதல் செய்யவும் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ஓஆர்எஸ் கரைசல் என்ற பெயரில் போலியான பானங்களை விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஓஆர்எஸ் என்றால் ஓரல் ரீஹைடிரேஷன் சொல்யூஷன் என்பதாகும்.
வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவைகளால் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் போது ஓஆர்எஸ் வழங்கப்படுகிறது. உலக பொது சுகாதார அமைப்பு, தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் பெயர் அச்சிடப்பட்ட ஓஆர்எஸ் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஓஆர்எஸ் என்ற பெயரில் அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் பானங்களை மத்திய அரசு கடந்த வாரம் தடை செய்திருந்தது. இந்த நிலையில் ஓஆர்எஸ் என்ற பெயரில் போலி பானங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாவட்டங்களில் உள்ள மருந்தகம் உள்ளிட்டவற்றில் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கும் சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் ORSL, ORSL PLUS, ORS FIT என்ற பெயர்களில் மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக பொது சுகாதார நிறுவனத்தால் வழங்கப்படும் அங்கீகாரம் அச்சிடப்பட்ட ஓஆர்எஸ் மட்டுமே விற்பனை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஓஆர்எஸ்எஸ் என்று பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்ட போலியான பானங்கள் பல்வேறு வண்ண நிற பெட்டிகளில் விற்பனையாகி வந்தது. அதில் கடைசியில் கீழ் பகுதியில் இவை ஓஆர்எஸ் இல்லை என்றும் அச்சிடப்பட்டுள்ளது. ஓஆர்எஸ்எல் என்ற கரைசலை மருந்தகம், கடைகளில் இருந்து பறிமுதல் செய்ய தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஓஆர்எஸ் என்பது குளுக்கோஸ், சோடியம், பொட்டாசியம், பிற எலக்ட்ரோலைட்டுகளின் கலவையாகும். இது தூய நீரில் கரைக்கப்படும் போது உடலில் இழந்த திரவங்கள், தாதுக்களை விரைவாக நிரப்பும் ஒரு கரைசலை உருவாக்குகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக ஏற்படும் நீரிழப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உப்பும் சர்க்கரையும் கலந்த கலவைதான் ஓஆர்எஸ் கரைசல் ஆகும். எனவே இதை வீட்டிலேயே தயாரிக்கலாம் என்கிறார்கள். இந்த கரைசல் தயாரிக்க 24 நேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். உடலில் உள்ள நீரிழப்பை சமன் செய்ய இது உதவுகிறது.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications