வானிலை வார்னிங்.. "டீப்பா" இருக்கும்.. ஆஹா அதுக்கு மட்டும் சான்ஸே இல்லை.. தமிழ்நாட்டிற்கு 3வது லக்!
சென்னை: வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை பெய்த சிறப்பான வடகிழக்கு பருவமழைகளில் இந்த வருடம் பெய்யும் மழையும் ஒன்றாகும். வடகிழக்கு பருவமழையில் இதுவரை இரண்டு காரணங்களுக்காக தமிழ்நாட்டில் மழை பெய்து உள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே இந்த இரண்டு வார மழையும் பெய்தது. அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவ உள்ள நிலையில், அதன்பின் மீண்டும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

முதல்முறை மிஸ்
இந்த மாதம் முதல் வாரம் இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சூழற்சி நிலவி வந்தது. இதன் கரணமாகவே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்தது. கடல் பரப்பில் இருந்து 3 மீட்டர் உயரத்தில் இந்த சுழற்சி நடந்து கொண்டு இருந்தது. ஆனால் இது புயலாக மாறவில்லை.

ஏன் மாறவில்லை
பொதுவாக புயல் ஏற்பட வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும். தற்போது அங்கு வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியஸ் வரை இருந்தது. ஆனால் நிலப்பரப்பிற்கு மிக அருகில் இருந்த காரணத்தால் இது புயலாக மாறவில்லை. இதனால் அப்போது புயலில் இருந்து தமிழ்நாடு தப்பியது.

தப்பிய தமிழ்நாடு
அதன்பின் கடந்த வாரம் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதுவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. ஆனால் புயலாக உருவெடுக்கவில்லை. இதன் மையத்தில் வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியஸ் வரை இருந்தது. ஆனால் இதுவும் நிலப்பரப்பிற்கு மிக அருகில் இருந்த காரணத்தால் இது புயலாக மாறவில்லை. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக கரையை கடந்து வலுவிழந்து உள்ளது.

புதியது
இது போக இன்று தென்கிழக்கு வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இன்று முதல் நவம்பர் 19 ம் தேதி வரை தமிழ்நாடு-புதுவையில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் புயலாக மாறும் வாய்ப்பு குறைவு. இது ஆழ்ந்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கும். அதன்பின் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். ஆனால் இதன் வெப்பநிலை குறைவாக இருக்கிறது.

தூரம்
நிலப்பரப்பில் இருந்து இது மிக அருகில் இருக்க வாய்ப்பு உள்ளது. இது மிகவும் "டீப்பாக" இருந்தாலும் கூட வெப்பநிலை குறைவாக இருப்பதால் புயலாக மாறும் வாய்ப்புகள் குறைவு. இதனால் மூன்றாவது முறையாக தமிழ்நாடு புயலில் இருந்து தப்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்யும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும். அதன்பின்பே தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை பெய்யும்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications