இந்த நேரத்துல.. எந்த காரணத்துக்காகவும் வெளியே போக வேண்டாம்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.. ஏன்?
சென்னை: சென்னையில் நிலவும் கடுமையான வெப்பநிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இருந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் மீண்டும் சென்னையில் வெயில் அடித்து வருகிறது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையாக அவதிக்கு உள்ளாக்கியது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது.

கோடை காலம்: கோடை காலம் முடியும் தருவாய் நெருங்கியும் கூட சென்னையில் இன்னும் வெயில் குறையவில்லை. அக்னி நட்சத்திரம் முடிந்து பல நாட்கள் ஆகியும் சென்னையில் வெயில் இன்னும் குறையவில்லை.
கடந்த மாதம் 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. அதோடு 25ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்பின் ஜூன் 4ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்தது. ஆனால் இன்று வரை வெப்ப அலையும் முடியவில்லை. தென்மேற்கு பருவமழையும் தொடங்கவில்லை. வெயிலும் குறையவில்லை.
தமிழ்நாடு வெதர்மேன்: இந்த நிலையில் சென்னையில் நிலவும் கடுமையான வெப்பநிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அவர் செய்துள்ள போஸ்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் இன்று வெப்பநிலை மிக மோசமாக இருக்க போகிறது. இங்கே 41-42 டிகிரி செல்ஸியஸ் ஆக இருக்கும். இரவு 11-3 மணி வரை முற்றிலும் தேவைப்படாவிட்டால் மட்டுமே வெளியே செல்லுங்கள். இல்லையென்றால் வெளியே செல்ல வேண்டாம்.
இந்த கடைசி 2 நாட்களுக்கு பயங்கர வெப்பமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை முதல் குறைந்த வெப்பநிலை நிலவும். வறண்ட ஜூன் மாதத்தில் கூட இயற்கை நமக்கு ஏராளமான மழையைத் தரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பயங்கரமான வெப்ப நாட்கள் எப்போதும் நல்ல மழையுடன் முடிவடையும். ஜூலை 2015 வெப்ப நாட்களில் இதைப் பார்த்தோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னையின் வெப்ப நாட்கள் முடிவுக்கு வரும். ஜூன் மாதம் சென்னைக்கு ஒன்றும் வலுவான மழை மாதம் அல்ல, ஜூன் மாதத்தில் சராசரியாக 50+மிமீ மட்டுமே மழை பெய்யும். இந்த மாதம் சராசரியை விட இரண்டு மடங்கு நல்ல மழை பெய்யக்கூடும் வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications