"மிக மிக மிக பெரிய லிஸ்ட்".. புரட்டி எடுக்கும் மழை.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட முக்கிய வார்னிங்!
சென்னை: கோடை காலத்திற்கு இடையில் தமிழ்நாடு முழுக்க கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னையில் இன்று அதிகாலை தீவிர கனமழை பெய்தது. இந்த மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. திடீரென 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று மாலையும், இரவும் கோடை மழை பெய்தது.

சென்னையில் நேற்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. 9 மணிக்கு தொடங்கிய மழை விட்டு விட்டு பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கிறது,. பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது.
சென்னையில் கோடை காலம் என்பதற்கான சுவடே இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை தொடங்கிய கனமழை இன்னும் முடியவில்லை. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது.
மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னை வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், மழை மேகங்கள் சென்னையை விட்டு செல்கின்றன.. மிக தீவிர மழை மேகங்கள் தற்போது திருப்பூர் - கோயம்புத்தூர் பெல்ட் நோக்கி செல்கிறது. அங்கே மிக தீவிரமான மழையை எதிர்பார்க்கலாம்.
திருப்பூரில் மிக மிக கனமழை பெய்யும். கன்னியாகுமரியிலும் மிக தீவிர கனமழை பெய்து உள்ளது. திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று ஒரு மாவட்டத்தை மட்டும் தனித்து குறிப்பிடுவது கடினம்.
நாளை (இன்று) மழை பெய்யும் மாவட்டங்களின் லிஸ்ட் மிக மிக மிக பெருசாக இருக்க போகிறது. இந்த மழையை முடிந்தவரை அனுபவித்து மகிழுங்கள், மே மாதத்தின் 2வது பாதியில் நல்ல வெப்பத்தை எதிர்கொள்வோம், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை மைய அறிவிப்பு: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கனமழை பெய்யும்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications