"ஹை சான்ஸ்".. அடுத்த 1- 2 மணி நேரம் என்ன நடக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் தந்த முக்கிய வானிலை அப்டேட்!
சென்னை: சென்னையில் வானிலை எப்படி இருக்கும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் மழை அளவு எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.
"மேகம் கருக்குது.. சாரல் அடிக்குது"... இதுதான் கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டின் வானிலை. கடந்த சனிக்கிழமை தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தமிழ்நாட்டில் உச்சம் அடைந்துள்ளது.
தற்போது வட இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் கரணமாகவே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்து வருகிறது.

மழை - புயல்
கடல் பரப்பில் இருந்து 3 மீட்டர் உயரத்தில் இந்த சுழற்சி நடந்து கொண்டு இருக்கிறது. இது புயல் உருவாவதற்கு சாதகமான சூழ்நிலை. ஆனால் இதனால் புயல் உருவாக வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கூறியுள்ளது. இந்த சுழற்சி இலங்கை மண்ணுக்கு மிக அருகில் உள்ளது. அதனால் புயலாக மாற போதிய நேரம் இல்லை. அதே சமயம் இதனால் தென் மண்டலத்தில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெதர்மேன்
தமிழ்நாட்டில் இன்று பெய்ய உள்ள மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இன்று வெள்ளிக்கிழமை தென் தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக மிக கனமழை பெய்யும். வடசென்னையில் மாலைக்கு பின் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்யும். 30 நிமிடத்தில் மொத்தமாக 60 மிமீ மழை பெய்ய எல்லாம் வாய்ப்பே இல்லை.

வெதர்மேன் அப்டேட்
எனவே ஆங்காங்கே பெய்யும் சிறிய அளவிலான மழைகள் எல்லாம் கண்டிப்பாக அச்சுறுத்தும் மழையாக இருக்காது. சென்னையில் இன்று சூரியன் தென்படும். அதே சமயம் இடை இடையே ஆங்காங்கே மழை பெய்யும். நாகை திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள், தென் தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும் என்று வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார்.

தென் சென்னை மழை
சென்னையில் அடுத்த 1 - 2 மணி நேரத்திற்குள் நீங்கள் காயவைத்த துணிகளை நீக்கி விடுங்கள். நீங்கள் இருக்கும் ஏரியாவை பொறுத்து காயவைத்த துணிகளை நீக்கி விடுங்கள். கொஞ்சம் நேரம் சூரியன் இருக்கும், என்று வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக சென்னை வானிலை மையமும் இன்று தென் தமிழ்நாட்டிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.

மழை அளவு
தமிழ்நாட்டில் இன்று கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். அதேபோல் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications