கொடுத்த பணத்திற்கு செலவு கணக்கு காட்டாத வரை.. தமிழகத்திற்கு காசு கிடைக்காது.. எச். ராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி கொடுத்துக்கொண்டே இருக்கிறது. சென்னையில் வெள்ளம் வருவதற்கு முன்பு கூட தமிழகத்திற்கு 5,000 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு வரைக்கும் இதற்கான இம்பிளிமெண்டேஷன் யுடிலைசைஸனுக்கான சான்றிதழை தரவில்லை. இந்த சான்றிதழ் வரவில்லை என்றால் ஒரு பைசா கூட வராது என்று பாஜகவின் எச் ராஜா கூறினார்.

தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை மெட்ரோவில் இரண்டாவது திட்ட விரிவாக்க பணியை யார் பணம் கொடுக்க வேண்டும். மெட்ரோ திட்டத்தை எடுத்து பாருங்க. மாநில அரசு தான் கொடுக்க வேண்டும்.

H Raja Tamil Nadu BJP

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார்கள், சென்னையில் வெள்ளம் வருவதற்கு முன்பே தமிழகத்திற்கு 5,000 கோடி கொடுத்தோம். இன்றைக்கு வரைக்கும் இதற்கான இம்பிளிமெண்டேஷன் யுடிலைசைஸனுக்கான சான்றிதழை தரவில்லை. இந்த சான்றிதழ் வரவில்லை என்றால் ஒரு பைசா கூட வராது. நீங்கள் வரும் பணத்தை எல்லாம் வாயில் போட்டுக்கொள்வீர்கள்.

இங்கே சென்னையில் வெள்ளம் வருவதற்கு முன்பு என்ன சொன்னீர்கள், 95 சதவீதம் முடிந்துவிட்டது என்று சொன்னீங்க. ஆனால் வெள்ளம் வந்த பிறகு தண்ணீர் வடியவில்லை என்று சொன்னதும் 42 சதவீதம் என்று சொல்கிறாங்க. நீங்க 60 சதவீதம் திருடுறீங்க சரி.. ஆனால் அந்த யுடிலைசைஸன் சான்றிதழ் எங்கே?. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவில்லை தெரியுமா?

எங்கே கூட்டத்தில் யுடிலைசைஸன் சான்றிதழை கேட்டுவிடுவார்களோ என்று பயந்து போகவில்லை. இது எப்படி என்றால் பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம் செய்யாமல் இருந்தால் டீச்சர் அடிப்பார்கள் என்று பயந்து குழந்தைகள் நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்பது போல் நம்ம முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்துக்கு போகமாட்டேன் என்று சொல்கிறார். இது முழுக்க முழுக்க ஊழல் அரசாங்கம். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் இவங்க வாயில் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. தமிழகத்தில் ஜூன் மாதம் மட்டும் 131 கொலைகள் நடந்துள்ளது. இதில் இந்த 15 நாட்களில் அரசியல் தலைவர்கள் நிர்வாகிகள் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் காரணமாக தான் நிறைய கொலைகள் நடந்திருக்கிறது. இப்போது எனக்கு ஒன்று நியாபகம் வருகிறது.

முன்பு அரியலூர் ரயில் விபத்தின் போது திமுகவினர், அழகேசா நீங்க ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா? என்று சொன்னது தான் நியாபகம் வருகிறது. இப்போது நாங்கள் கேட்கிறோம். அழகேசா நீங்க ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா? இவ்வளவு தூரம் சட்டம் ஒழுங்கு மோசமாக ஆன பிறகும் முதல்வராக ஒட்டிக்கொண்டு இருப்பது நியாயமல்ல. இவ்வாறு எச் ராஜா பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+