அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை.. குடும்ப தலைவிகளுக்கு 3 சலுகைகள்! அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
திண்டுக்கல்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு 3 சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை சக்கரபாணி கலந்து கொண்டு, மகளிர் குழுக்களுக்கு ரூ.93,60,000 மதிப்பில் கடன் தொகைக்கான காசோலையினை வழங்கினார்.
மேலும், ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு ரூ.70,000க்கான பணி ஆணை மற்றும் 5 நபர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கினார். அதனைத்தொடர்ந்து டி.பி. 23 எரமநாயக்கன்பட்டி புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திறக்கப்பட்டது.

அமைச்சர் சக்கரபாணி
நிகழ்ச்சியில் பேசிய அவர்," தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிடும் வகையில் உங்கள் ஊரைத்தேடி, உங்கள் இல்லத்தைத்தேடி சேவை செய்யும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதுவரை 5,000 முகாம்கள் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 5,000 முகாம்கள் நடைபெறவுள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது. அந்த வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 2023 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்து, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில் 711 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் 402 பேர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். மேலும் தகுதியுள்ள நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
3 சிறப்பு சலுகைகள்
தற்பொழுது முதலமைச்சர் மகளிருக்கு 3 சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளார்கள். தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் (நான்கு சக்கர வாகனம்) பெற்ற பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை போன்ற அரசின் உதவித்தொகை பெறும் பெண்கள் குடும்பத்தைச் சார்ந்தோர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
அரசு உதவித்தொகை
இதேபோல், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications