"முட்டாள் கூட்டம்.." பராசக்தி படத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.. இளைஞர் காங்கிரஸ் காட்டம்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள பராசக்தி படம் தமிழ்நாடு முழுக்க வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், அந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அருண் பாஸ்கர் காட்டமாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். படம் முழுவதுமே சித்தரிக்கப்பட்டவை; வரலாற்றுக்கு முற்றிலும் முரணானவை என்றும் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் பராசக்தி. இந்தித் திணிப்புக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களை அடிப்படையாகவும் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

பராசக்தி
இந்தப் படத்திற்கும் கூட ரிலீஸில் சென்சார் கிடைப்பதில் தாமதம் ஆனதால் சிக்கல் ஏற்படுமோ என்று ரசிகர்கள் அஞ்சினர். இருப்பினும், ரிலீஸுக்கு ஒரு நாள் முன்பு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்ததால் படம் திட்டமிட்டபடி எந்தவொரு சிக்கலும் இல்லாமல் வெளியானது. இப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூலிலும் புதிய சாதனையைப் படைத்து வருகிறது.
இளைஞர் காங்கிரஸ் காட்டம்
இதற்கிடையே பராசக்தி படத்திற்கு எதிராகத் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அருண் பாஸ்கர் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். பராசக்தி படம் தடை செய்யப்பட வேண்டிய திரைப்படம் என்றும் படத்தில் இருக்கும் வரலாற்றில் நடைபெறாத அனைத்துக் காட்சிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், படத் தயாரிப்புக் குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லை என்றால் படக்குழு மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தடை செய்ய வேண்டிய படம்
பராசக்தி படம் தடை செய்யப்பட வேண்டிய திரைப்படம் என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், படத்தில் இடம் பெற்ற சில முக்கிய கண்டிக்கத்தக்கக் காட்சிகள் என்று சொல்லி சில காட்சிகளைப் பட்டியலிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "
1. அனைத்து மாநிலங்களிலும் உள்ள தபால் அலுவலகங்களில் ( Post Office) இந்தியில் மட்டும் தான் படிவங்கள் இனி நிரப்பப்பட வேண்டும் என்று 1965ல் காங்கிரஸ் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்டுக்கதை.
முட்டாள் கூட்டம்
2. படத்தில் இந்திரா காந்தியை சிவகார்த்திகேயன் சந்தித்து பேசுகிற மாதிரியும், அதன் பின் இந்திரா காந்தி வில்லத்தனமாக பேசும் வண்ணம் வசனங்களை வைத்துள்ளார்கள். இந்த படத்தை தயாரித்த முட்டாள் கூட்டத்திற்கு மறைத்த தலைவர்களை திரையில் காண்பிக்கும் போது வரலாற்றில் நடைபெறாத காட்சிகளை கற்பனையாக காண்பிக்க கூடாது என்பது சட்டத்தில் உள்ளது என்பதே தெரியாமல் படத்தை அவர்கள் இஷ்டத்திற்கு வரலாற்றில் நடைபெறாத காட்சிகளை எடுத்துள்ளார்கள்.
3. இன்னும் ஒரு படி மேலே சென்று 12 பிப்ரவரி 1965 அன்று கோயம்புத்தூருக்கே வராத இந்திரா காந்தியை அங்கு வந்ததாக படமாக்கி அவர் கண் முன் ரயில் எரிந்து வந்து இந்தி திணிப்புக்கு எதிராக கையெழுத்து கொடுக்கும் காட்சியெல்லாம் வரலாற்றில் நடைபெறவே இல்லை அதை படமாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஆதாரம் இல்லை
4. இறுதியில் படம் முடிந்த பிறகு முடிவில் (End Credits) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான காமராஜர், இந்திரா காந்தி மற்றும் அன்றைய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி என மூவரின் நிஜ புகைப்படத்தை காண்பித்து காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட தமிழர்களை பொள்ளாச்சியில் சுட்டுக் கொன்றது என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியையும் தலைவர்களையும் பொய்யான தரவுகளுடன் சித்தரித்துள்ளது.
இதை தவிர காங்கிரஸ் கொடியை எரிக்கும் காட்சியையும் படத்தில் திணித்துள்ளனர். ஆக மொத்தம் இந்த படம் முழுவதுமே சித்தரிக்கப்பட்ட சொந்த கற்பனையில் வரலாற்றுக்கு முற்றிலும் முரணாக காங்கிரஸ் கட்சியை தாக்கும் வகையில் பல பொய்களை கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். பராசக்தி படத்தில் உள்ள வரலாற்றில் நடைபெறாத அனைதது காட்சிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். படத்தயாரிப்புக் குழு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் படக்குழு மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications