தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்! தலைவர்கள் இரங்கல்
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் (வயது 84) இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இது குறித்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப், தமிழ்நாட்டில் இஸ்லாமிய சமூகத்திற்கு சேவை செய்வதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த ஒரு இஸ்லாமிய அறிஞராவார். அரபு மொழி இலக்கியத்தில் எம்.ஏ, எம்.பில் மற்றும் பி.எச்.டி பட்டம் பெற்ற இவர், எகிப்தில் உள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அல் இஜாசதுல் ஆலியா பட்டமும் பெற்றுள்ளார். அல் இஜாசதுல் ஆலியா என்பது இஸ்லாமிய கல்வியில் மிக உயர்ந்த பட்டங்களில் ஒன்றாகும்.
இவர், கர்நாடக நவாப்களின் அரசவையில் திவானாகப் பணியாற்றிய திவான் முகமது கவுஸ் ஷர்ஃப்-உல்-முல்க் (ரஹ்மதுல்லாஹி அலைஹ்) குடும்பத்தை சேர்ந்தவராவார். இவரது கொள்ளு தாத்தா காஜி உபைதுல்லா நக்ஷ்பந்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹ்), 1880ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் மெட்ராஸ் மாகாணத்தின் முதல் அரசு தலைமை காஜியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
தலைமை காஜி என்பவர் இஸ்லாமிய சமூகத்தில் ஒரு முக்கியப் பொறுப்பாவார். இஸ்லாமிய சட்டதிட்டங்களை (ஷரியா) செயல்படுத்துவதிலும், சமூகத்திற்கு வழிகாட்டுவதிலும் தலைமை காஜிக்கு பல கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன.
இஸ்லாமிய மாத பிறைகள், ரமலான் நோன்பு, ஈத் பண்டிகைகள் (பெருநாள்) போன்ற முக்கிய நிகழ்வுகளை அறிவித்து, அவற்றை இஸ்லாமிய சமூகம் எப்படி கொண்டாட வேண்டும் என்பதற்கு வழிகாட்டுதல் என சமய சடங்குகள் மற்றும் பண்டிகைகளை அறிவித்தல் இவரது பணிகளில் ஒன்றாகும். உதாரணமாக, தமிழக அரசு தலைமை காஜி, ரமலான், மீலாது நபி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படும் தேதிகளை அறிவிப்பார்.
முஸ்லிம் தனிநபர் சட்டம் தொடர்பான விஷயங்களில் மக்களுக்கு ஆலோசனை வழங்குதல், திருமணம், விவாகரத்து (தலாக்), வாரிசுரிமை, வக்பு போன்ற குடும்ப மற்றும் சமூக ரீதியான விஷயங்களில் இஸ்லாமிய சட்டத்தின்படி முடிவுகளை எடுக்க வழிகாட்டுதல் என இஸ்லாமிய சட்ட ஆலோசனையை கொடுப்பதும் இவர் பணிகளில் ஒன்றாகும்
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications