Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயதை மாற்றியவர்; மன்மோகனை கதற விட்டவர்! சர்ச்சைகளின் நாயகன் விகே சிங்? இவரா அடுத்த ஆளுநர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் ராணுவத்தில் போதுமான ஆயுதங்கள் இல்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் மிகப்பெரிய சர்ச்சையை நாடு முழுவதும் கிளப்பிய விகேசிங் தமிழ்நாட்டின் அடுத்த ஆளுநராகப் பதவியேற்க இருக்கிறார் என்ற தகவல் ஆளும் கட்சி தரப்பைக் கலங்கடித்திருக்கிறது என்றே பலரும் கூறிவருகின்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிந்தும் அவரை இன்னும் மாற்றாமல் மத்திய அரசு வைத்துள்ளது என திமுக குற்றஞ்சாட்டி வந்தநிலையில், அவருக்குப் பதிலாக முன்னாள் ராணுவத் தளபதி விகே சிங் அந்த பதவிக்கு நியமிக்கப்படலாம் என்ற தகவல் கசிந்து வருகிறது. தமிழ்நாட்டில் விகே சிங், ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று ஒரு விவாதம் நடந்து வருகிறது.

vk singh tamil nadu

ஆனால் அவர், ரஷியாவில் நடைபெற்று வரும் 16 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது குறித்தும் அங்கே சில ராணுவ ரீதியான ஒப்பந்தங்கள் போட இருப்பது பற்றியும் ஆங்கில ஊடகங்களில் உட்கார்ந்து விவாதித்து வருகிறார்.

விகே சிங் ராணுவத் தளபதியாக இருந்து கடந்த 2012இல் ஓய்வுபெறும்போது 'இந்தியா டுடே’ ஆங்கில ஊடகம் 'சர்ச்சைக்குரிய அதிகாரியின் பதவிக்காலம் முடிகிறது’ என்று தலைப்புச் செய்தி வெளியிட்டது. இவர் ராணுவத் தளபதியாகப் பதவியேற்றபோது ஊழலுக்கு எதிரான போர்வீரன் என்று வர்ணிக்கப்பட்டார். இந்தப் பதவியில் சிங் மொத்தம் 26 மாதங்கள் இருந்தார். சரியாகச் சொன்னால், 2010 மார்ச் மாதம் 31 ஆம் தேதி விகே சிங்கே ராணுவத் தளபதியாகப் பதவியேற்றார். அப்போது அவருக்கு 62 வயது. அதாவது 42 வருடச் சேவைக்குப் பிறகு அவரது ராணுவ உடுப்பை அவர் கழற்றினார்.

கிட்டத்தட்ட நாட்டின் அதிகாரம் மிக்கப் பதவியை அலங்கரித்தவர் விகே சிங். சுமார் 1.3 மில்லியன் படைவீரர்கள் கொண்ட ஒரு அணிக்கு அவர் தலைமை தாங்கி நாட்டை வழிநடத்தினார். அவரது பதவிக் காலத்தில் ராணுவத் துறைக்குள் சில மாற்றங்களைக் கொண்டுவரவும் செய்தார். ஆயுதங்கள் பற்றாக்குறை மற்றும் வெடி மருந்துகள் போதிய அளவுக்கு இல்லாமல் ராணுவத்துறை இக்கட்டான சூழலிலிருந்த போது அவர் அதில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசைத் தூண்டினார்.

ஹரியானாவில் உள்ள ரோஹ்தக் மாவட்டம் பாபோரா தான் விகே சிங்கின் சொந்த கிராமம். நாட்டில் குக்கிராமத்திலிருந்து இந்தப் பதவிக்கு அவர் உயர்ந்தார். இவர் தனது வயது வரம்பைச் சான்றிதழில் மாற்றிப் பதிவிட்டதாக ஒரு புகார் எழுந்தது. அது நாடு முழுவதும் அதிர்வலையை உண்டாக்கியது. நீதிமன்றம் வரை இவரது வழக்கு சென்றது. அதற்கு முன்பு இதைப் போன்ற ஒரு புகாரை வேறு எந்தத் தளபதியும் சந்தித்ததில்லை.

இவர் இரண்டு பிறந்த தேதிகளை ராணுவப் பதிவேடுகளில் தெரிவித்திருந்ததுதான் சர்ச்சைக்கு முதல் காரணமாக அமைந்தது. ராணுவச் செயலர் கிளை அலுவலகப் பதிவேட்டில் 10 மே 1950 என்றும் மற்றொரு துணைத் தளபதி கிளைப் பதிவேட்டில் 10 மே 1951 என்றும் மாற்றி மாற்றிப் பதிவிட்டிருந்தார். எதை உண்மையான பிறந்த தேதியாக கொள்வது என்பதில் சர்ச்சை எழுந்தது. வயது சர்ச்சை, 2006 இல் வெளிச்சத்திற்கு வந்தது.

இறுதியாக 1951 தான் தனது உண்மையான பிறந்த தேதி என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார் விகே சிங். அதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ஊழலற்ற தூய்மையான அதிகாரி என்ற முகம் மாறியது. மேலும் தரமற்ற டிரக்குகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் வழங்கியதற்காக லெப்டினன்ட் ஜெனரல் ரூ. 14 கோடி லஞ்சம் கொடுத்தார் என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார் சிங்.

அதைப் பற்றி மத்திய அரசிடமும் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் உடனடியாக தெரிவித்தும் பலன் இல்லை என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது. அதேபோல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவத்தில் உள்ள பற்றாக்குறைகளையும் பலவீனங்களையும் வெளிப்படையாக இவர் எழுதிய கடிதம் நாட்டையே உலுக்கியது.

ஜெனரல் வி.கே.சிங்கின் 26 மாத பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெற்ற போது முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ஷங்கர் பிரசாத், “வரலாறு ஜவஹர்லால் நேருவை விட்டுவைக்கவில்லை, வின்ஸ்டன் சர்ச்சிலையும் விட்டுவைக்கவில்லை. ஜெனரல் வி.கே. சிங்கையும் வரலாறு விட்டுவைக்காது" என்றார். அந்த வார்த்தை இப்போதுவரை கல்வெட்டில் எழுதப்பட்டதைப் போல் பளபள என்று நினைவில் இருக்கிறது.

ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்கின் பதவி உயர்வை நிறுத்தி வைத்து ஆளும் மத்திய அரசுக்கு எதிராகப் பல அணுக்குண்டுகளை வீசியது எனச் சர்ச்சைக்குப் பெயர் போன விகேசிங், தனது ஓய்வுக்குப் பின் பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ராணுவ விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சரானார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரானார். வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் இருந்தார். தொடர்ந்து மோடியின் குட் புக்கிலிருந்து வருபவர் சிங். அவரது உயரத்திற்கு ஆளுநர் பதவி என்பது மிகமிக சாதாரணம். அப்பா காலத்திலிருந்தே ராணுவ உடையின் அதிகாரத்தை நேரடியாக அனுபவித்தவர்.

ஆனால், அதிகாரம் எந்த வடிவத்தில் வந்தாலும் யார்தான் மறுப்பார்கள். இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், ஆளுநர் ரவியைவிட இவர் ஆயிரம் மடங்கு தெளிவானவர். எனவே இவர் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தால் பல சம்பவங்கள் காத்திருக்கிறது என்றே சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+