டாக்டர்களுக்கு மிக முக்கிய உத்தரவு.. அமைச்சர் மா.சு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு.. குஷியில் பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணிக்கு உரிய நேரத்தில் வராத மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் இரண்டு முன்னேறிய மாநிலங்கள் என்றால் அது மகாராஷ்டிராவும் தமிழ்நாடும்தான். இந்த இரண்டு மாநிலங்கள்தான் இந்தியாவின் ஜிடிபிக்கும் பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. இந்த இரண்டு மாநிலங்கள்தான் பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு முதுகெலும்பாக உள்ளது.

Tamil Nasu Government hospital doctors are not allowed to be late anymore says Minister Ma. Subramaniam

மகாராஷ்டிராவை எடுத்துக்கொண்டால் அந்த மாநிலம் மும்பை, புனே என்ற இரண்டு நகரங்களை கொண்டு உள்ளது. மற்ற மகாராஷ்டிரா பகுதிகள் இன்னும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை அடையவில்லை. ஆனால் தமிழ்நாடு பரந்துபட்ட வளர்ச்சியை பெற்றுள்ளது.

தமிழ்நாடு முக்கியமாக ஆட்டோமொபைல் துறையிலும் மருத்துவ துறையிலும் சிறந்து விளங்கி வருகிறது. இந்தியாவின் மருத்துவ தலைநகர் சென்னை என்று அழைக்கப்படும் அளவிற்கு மருத்துவ துறைக்கு தமிழ்நாடு மிகப்பெரிய முக்கியத்துவத்தை கொடுத்து உள்ளது. தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு வசதிக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு என்றால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசு செலுத்திய 28.9 லட்சம் வேக்சின் டோஸ்கள்தான்.

முக்கிய அறிவிப்பு: இந்த நிலையில்தான் பணிக்கு உரிய நேரத்தில் வராத மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பணி நேரத்திற்கு வராத மருத்துவர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார். பொதுமக்கள் அறியும் வகையில் பாம்புகடி மற்றும் நாய்கடி மருந்துகள் இருப்பு உள்ளதை அறிவிப்பு பலகையில் வைக்க அறிவுறுத்தினார்.

மாண்புமிகு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (27.08.2023) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சரியான நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள துணை இயக்குனர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் மருத்துவமனை ஆய்வின் போது அங்கு நிறுத்தப்பட்டுள்ள நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் மருந்து பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு சரிவர பாதுகாப்பின்றி இருந்ததை பார்த்த அமைச்சர் அவர்கள், அங்குள்ள செவிலியரிடம் விசாரித்த போது அந்த வாகனத்தின் ஓட்டுனர் பணிக்கு வராததையும், அந்த வாகனத்தில் இருந்த மருந்துகள் பாதுகாப்பின்றி இருப்பதை கண்ட அமைச்சர் அவர்கள், அலட்சியத்தன்மையுடன் பணியாற்றியதை அறிந்து, அந்த ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள துணை இயக்குநர், அவர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாய்க்கடி மற்றும் பாம்புகடி மருந்துகள் கையிருப்பு உள்ளதை பொதுமக்கள் தேவைக்கேற்ப அறிந்து பயன்படுத்தும் வகையில், அதற்குரிய மருந்து இருப்பு அறிவிப்பு பலகைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைக்குமாறு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் அவர்களுக்கு அறிவுறுத்தினார், என்று கூறப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+