தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுத்தறிவு பெற்றவர்கள்... ஸ்டாலின் பெருமிதம்

2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் குடி எழுத்தறிவு பெற்றது என்பதை அறிவார்ந்த சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழடியில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்து பார்த்ததில் சங்க காலத்திலேயே முதிர்ச்சியடைந்த நாகரீகம் என்பது தெரியவந்திருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் குடி எழுத்தறிவு பெற்றது என்பதை அறிவார்ந்த சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Recommended Video

    சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் உரை

    சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு இருந்துள்ளது உறுதியாகியுள்ளது.

    Tamil people were literate 2,600 years ago says MK Stalin

    கீழடியில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்து பார்த்ததில் சங்க காலத்திலேயே முதிர்ச்சியடைந்த நாகரீகம் என தெரியவந்துள்ளது. அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம், தொல்பொருட்கள் நேர்த்தி ஆகியவை முதிர்ச்சியான நாகரீகத்துக்கு சான்றாக உள்ளது.

    பல்வேறு நவீன உபகரணங்களை கொண்டு தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் கீழடியில் கிடைத்த பொருட்களின் கால நிர்ணயத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கீழடி அருகே உள்ள அகரத்தில் கிடைத்த மண் மாதிரியை சோதனை செய்ததில் அங்கு நெல் சாகுபடி செய்தது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

    கிருஷ்ணகிரி மயிலாடும்பாறையில் ஈமைச் சின்னங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. மயிலாடும்பாறையில் கிடைத்த பொருட்கள் அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. மயிலாடும்பாறையில் கிடைத்த தொல்லியல் எச்சங்கள் கி.மு. 2,172ம் ஆண்டை சேர்ந்தவை என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக கூறினார்.

    தமிழ்நாட்டில் தொல்லியல்துறை நடவடிக்கைகளை பிரபல தொல்லியல் ஆய்வாளர்கள் பாராட்டியுள்ளனர் என்றும் முதல்வர் கூறினார்.
    கடல் கடந்து தமிழர்கள் வெற்றி கண்ட நாடுகளிலும் தொல்லியல் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கொற்கையில் இந்த மாதம் ஆழ்கடல் ஆய்வுக்கான முன்கள ஆய்வு தொடங்க உள்ளது. இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை நிறுவ இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் குடி எழுத்தறிவு பெற்றது என்பதை அறிவார்ந்த சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+