கலவரத்திற்கு அழைப்பு விடுத்த ஆதவ் அர்ஜுனா.. ஆணவக் கூட்டத்தின் சூத்ரதாரி.. திமுகவிற்கு வந்ததே கோபம்!
சென்னை: ஒரு பேரிழப்பை, பெருந்துயரை உருவாக்கிக் காட்டிய ஆணவக் கூட்டத்தின் சூத்ரதாரி புரட்சி வெடிக்க வேண்டும் என்கிறான் என்று ஆதவ் அர்ஜுனாவை திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற அரசியல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், "அரசியல் பலத்தை காட்டும் நோக்கில் கூட்டம் திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக துவக்கப்பட்டது. தொண்டர்கள் மரங்கள் மற்றும் கடைகள் மீது ஏறி அமர்ந்தனர். இதில் மரக்கிளைகள் முறிந்து கீழே நின்றவர்கள்மீது விழுந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்ததாக, ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் மீது குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் காத்திருத்தல், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளின் இல்லாமை, கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அழுத்தம் ஆகியவற்றால் மக்கள் உடல் நிலை சோர்ந்து கீழே விழுந்ததாகவும், அவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும் எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
புஸ்ஸி ஆனந்த் கைது
இந்த நிலையில்தான் கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறார்கள். இன்னும் பல தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட ஐந்து பேர் போலீசார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தான் கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கலவரத்தை தூண்டும் வகையில் போஸ்டுகள்
ஏற்கனவே அரசுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் சில இன்ஸ்டாகிராம் influencerகளை வைத்து போஸ்டுகளை செய்து கொண்டு இருந்தது. முக்கியமாக கலவரத்தை தூண்டும் வகையில், வதந்திகளை பரப்பும் வகையில் போஸ்டுகளை செய்து கொண்டு இருந்தனர்.
இதற்கு இடையே ஆதவ் அர்ஜுனாவும் நேற்று இரவு கலவரத்தை தூண்டும் வகையில் போஸ்ட் செய்து இருந்தார். தமிழக அரசுக்கு எதிராக பெரிய கலவரம் நடக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து போஸ்ட் செய்து இருந்தார்.
அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு கேடு கெட்ட ஊழல்வாதி, கூட்டத்தை காட்டி அரசியல் பேரம் செய்ய நினைத்து, ஒரு பேரிழப்பை, பெருந்துயரை உருவாக்கிக் காட்டிய ஆணவக் கூட்டத்தின் சூத்ரதாரி புரட்சி வெடிக்க வேண்டும் என்கிறான்.
— Saravanan Annadurai (@saravofcl) September 29, 2025
புரட்சி என்றால் பணம் கொடுத்து 100 இன்புளுயன்சர்ஸ்… pic.twitter.com/6tLUjHol7n
திமுக விமர்சனம்
இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவை திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு கேடு கெட்ட ஊழல்வாதி, கூட்டத்தை காட்டி அரசியல் பேரம் செய்ய நினைத்து, ஒரு பேரிழப்பை, பெருந்துயரை உருவாக்கிக் காட்டிய ஆணவக் கூட்டத்தின் சூத்ரதாரி புரட்சி வெடிக்க வேண்டும் என்கிறான்.
புரட்சி என்றால் பணம் கொடுத்து 100 இன்ப்ளூயன்சர்ஸ் மூலம் நிகழ்த்திக் காட்டிவிடலாம் என கனவு கண்டுக் கொண்டிருக்கிறானா?, என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications