Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே வாரத்தில் தமிழக அரசியலை.. திரும்பி பார்க்க வைத்த 2 பாம்பு.. இதை கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலை கடந்த 1 வாரத்தில் 2 பாம்புகள் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. ஒன்று நேற்று நடந்த திமுக கூட்டத்திற்குள் புகுந்த பாம்பு.. இன்னொரு தவெக கூட்டத்தில் விஜய் சொன்ன பாம்பு கதை.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட விழா மேடை அருகே கட்டுவிரியன் பாம்பு சீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த கண்ணன் என்பவரை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி பாம்பு

நேற்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் பல்வேறு நிறங்களால் ஆன ரோஜா உள்ளிட்ட பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக, விழா மேடையில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tamilaga Vetri Kazhagam Vijay and CM Stalin 2 Snake story changes Tamil Nadu politics

அப்போது, அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பூவுக்குள் மறைந்திருந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு, தூய்மை பணியாளர் கண்ணன் என்பவரை கையில் கடித்தது. தற்போது அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு பாம்பு கதை

ஈரோடு பெருந்துறை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் கடந்த வாரம் கூறிய பாம்பு கதை ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றது.

ஈரோடு பெருந்துறை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், மஞ்சள்... பொதுவா.. நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வச்சிதான் ஆரம்பிப்பாங்க.. நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள், நமக்காக நாம நல்லா இருகக்னும் என்பதுதான் மஞ்சள் கட்டித்தான் வேண்டிப்பாங்க.. மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. அதுமட்டும் இல்லை.. இங்க ஒரு மகத்தான ஒரு மனிதர் பற்றி பேசியே ஆகணும்.. ஈரோடு மண்.. விவசாயத்திற்கு பெயர்போன மண்.

எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க... நீங்க எண்ண பண்ணினாலும் என்னை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டாங்க.. உங்களை நம்பித்தான் நான் வந்து இருக்கேன். தவெக தொண்டர்கள் எனக்கு தைரியம் கொடுத்துள்ளனர். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.

காலிங்கராயன் இங்கே கட்டிய அணையை மறக்க முடியுமா? அந்த காலத்து ஹீரோ அவர்.. அவர் இங்கே எப்படி அணை கட்டினார் தெரியுமா? இங்கே பாம்பு ஒன்று போனதாம்.. அந்த கதையை சொல்கிறேன் கேளுங்கள்.. அந்த பாம்பு சென்ற திசையில் எல்லாம் இவர் நதியின் பாதையை நிர்ணயித்து.. அணையை கட்டினார்.. அப்படி ஹீரோக்கள் வாழ்ந்தா மண் இது.

ஆனால் இப்போது இதே மண் அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரிவு செய்யப்படாமல் வறட்சியில் உள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவு செய்ய சொன்னால் இவர்கள் அதை செய்யாமல்.. கண்காட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

காஞ்சிபுரத்தில் பேசியதை தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். மக்களுக்கு இலவசமாக கொடுப்பதை ஏன் விமர்சிக்கிறீங்க.. ஓசி ஓசி என ஏன் சொல்கிறீர்கள். என்ன கேட்பதற்கு யாரும் இல்லைன்னு நினைச்சீங்களா.. மக்களுக்கு ஒன்னு என்றால் விஜய் வந்து நிற்பான். மக்களும் இப்படித்தான். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்னால்.. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதாக சொல்கிறார்கள். உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறாதா.. (தொண்டர்கள் இல்லை.. இல்லை..) என்ன சொல்வது கேட்கிறதா?

திமுகவை சிலர் மோசமாக விமர்சனம் செய்வார்கள். அப்போதெல்லாம் ஏன் என்று யோசித்தேன். இப்போது புரிகிறது. நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீயசக்தி.. தீயசக்தி.. தீயசக்தி.. தீயசக்தி.. தீயசக்தி.. தவெக ஒரு தூயசக்தி.. இங்கே தீயசக்திக்கும் தூயசக்திக்கும் இடையில்தான் போட்டியே., என்று விஜய் பேசி இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+