துறைமுகம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வேட்புமனுவை நிராகரியுங்கள்.. தமிழன் பிரசன்னா ஆவேசம்!
சென்னை: துறைமுகம் சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் வினோத் வினோத் பி. செல்வத்தின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும். என்று தி.மு.க செய்தித்தொடர்ப்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா கூறினார்.
வினோத் பி. செல்வத்தின் பெயர் வேட்புமனுவிலும், வாக்காளர் அடையாள அட்டையிலும் முரணாக உள்ளது. இதனால் அவர் வேட்பு மனுவை ஏற்காத தேர்தல் ஆணையம், நாளை காலை வரை அவருக்கு நேரம் கொடுத்துள்ளது.

தி.மு.க செய்தித்தொடர்ப்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை சரிபார்க்கும் அலுவலகத்தில் இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:- பா.ஜ.க. வேட்பாளர் வினோத் பி. செல்வத்தின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் பெயரில்தான், வேட்பாளர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவேண்டும் என்பது விதி. ஆனால் பா.ஜ.க வேட்பாளரின் பெயர் வேட்புமனுவிலும், வாக்காளர் அடையாள அட்டையிலும் வேறுவிதமாக உள்ளது.அவரின் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்களில் முரண்பாடுகள் உள்ளது. அதனை சரிசெய்ய அலுவலர் அவருக்கு நாளை (21.03.2021) காலை 11 மணி வரை அவகாசம் கொடுத்திருக்கிறார்.
அதற்கான ஆதாரங்களை வேட்பாளர் அல்லது கட்சியால் அங்கிகரிக்கப்பட்ட முகவர் நேரடியாக தாக்கல் செய்யவேண்டும். ஆனால் சட்டத்திற்கு புறம்பாக முகம்தெரியாத யாரோ ஒருவர் அலுவலகத்தில் ஆவணங்களை வைத்துவிட்டு சென்றுள்ளார். இதனை தி.மு.க மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். வினோத் பி. செல்வத்தின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் திரு.சேகர் பாபு மிகப்பெரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தமிழன் பிரசன்னா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications