முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்?
சென்னை: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இந்து மகா சபா ஒட்டியுள்ள சுவரொட்டிகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், "முதலில் தமிழன், அப்புறம்தான் இந்து" என்ற வாசகங்களுடன் பாஜகவை தோற்கடிக்க அறைகூவல் விடுத்து இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒடிசா விவகாரத்தில் தமிழரான வி.கே. பாண்டியன் குறித்து பாஜக தலைவர்கள் அவதூறாக பேசியதைக் கண்டித்து இந்த போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது..!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தல் களம் பலமுனைப் போட்டிகளையும், கொள்கை ரீதியான மோதல்களையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் காலூன்றுவதற்குத் தீவிரமாகப் போராடி வருகிறது. இத்தகைய சூழலில், தென் தமிழகத்தின் முக்கியப் பகுதியான மதுரை மாவட்டம் மேலூரில் ஒட்டப்பட்டுள்ள சில சுவரொட்டிகள், தமிழக அரசியலில் புதிய விவாதத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன...!
மதுரை மேலூர் பாஜக
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக, வழக்கமாக எதிர்க்கட்சிகள்தான் போஸ்டர் யுத்தத்தில் ஈடுபடும். ஆனால், வியப்பளிக்கும் வகையில் "தமிழ்நாடு இந்து மகா சபா" மற்றும் "தமிழன் தன்மான பேரவை" ஆகிய அமைப்புகள் மேலூர் பகுதிகளில் பாஜகவைச் சாடி போஸ்டர்களை ஒட்டியுள்ளன. இந்த சுவரொட்டிகளில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் அரசியல் நோக்கர்களிடையே கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. "தமிழர் விரோத பாஜகவை தமிழ்நாட்டில் தோற்கடிப்போம்" என்ற நேரடித் தாக்குதலுடன் அந்த போஸ்டர்கள் தொடங்குகின்றன.
பொதுவாகத் தங்களை இந்துத்துவ அமைப்புகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் அமைப்புகளே பாஜகவை எதிர்ப்பது அரசியல் களத்தில் ஒரு திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த மோதலுக்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணம், ஒடிசா மாநில அரசியலில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் ஆகும்.
போஸ்டர்கள்
ஒடிசாவில் ஒரு தமிழரை முதலமைச்சராக வரவிடமாட்டோம் என்று பாஜக தலைவர்கள் பேசியதாகக் கூறி, இந்த அமைப்புகள் கொந்தளித்துள்ளன. குறிப்பாக, பூரி ஜெகநாதர் கோயில் பொக்கிஷ அறை சாவியைத் தமிழ்நாட்டிற்கு பாண்டியன் கொண்டு சென்றுவிட்டார் என்று பாஜகவினர் பரப்பிய தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், அது மண்ணின் மைந்தர் மீது வீசப்பட்ட அவதூறு என்றும் அந்தப் போஸ்டர்கள் குற்றம் சாட்டுகின்றன.
"நாங்க முதலில் தமிழன்டா... அப்புறம் தாண்டா இந்து" என்ற மேலூர் போஸ்டர் வாசகம், தமிழகத்தின் ஆழமான மொழிப்பற்றையும், அடையாள அரசியலையும் மீண்டும் ஒருமுறை பறைசாற்றுகிறது.
மொழி வெறி கொண்டு தமிழர்களை அவதூறு பேசும் பாஜக தலைவர்களைத் தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம் என்ற அந்த அமைப்புகளின் முழக்கம், தேர்தல் நேரத்தில் பாஜகவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தலைமைக்கு ஷாக்
ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இதே போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மதுரையிலும் இது எதிரொலிப்பது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கும் பாஜகவிற்கு, இந்து அமைப்புகளிடமிருந்தே கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு, ஒரு சவாலாக மாறியுள்ளது.
தமிழின உணர்வும், மத அடையாளமும் மோதிக்கொள்ளும் இடமாக இந்த போஸ்டர் யுத்தம் மாறியுள்ளது. மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் நிலவும் அரசியல் பதற்றம், வரும் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். எது எப்படியோ, இந்த போஸ்டர் யுத்தம் தமிழக தேர்தல் களத்தின் வெப்பத்தை இன்னும் சில டிகிரி உயர்த்தியுள்ளது என்பதில் ஐயமில்லை...!
-சிறப்பு நிருபர்
-
ABP survey: திமுக கூட்டணி 170+ இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்குமாம்! பரபரக்கும் சர்வே! -
ஸ்டாலினா? எடப்பாடியா? உண்மையிலேயே யார் 'கெத்து'? ரெக்கார்டு என்ன சொல்லுது? -
சொதப்பிய விஜய் கட்சி! கச்சிதமாக நிற்கும் திமுக, அதிமுக! எடப்பாடி தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்கள் -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
‘டியூசன் அக்கா’ திட்டத்தை வாக்குறுதியாக அறிவித்த காங்கிரஸ்.. அப்படினா என்ன? மாணவர்களுக்கு ஜாக்பாட் -
62 தொகுதிகளில் சர்ஜிக்கல் திமுகவின் மெகா ஆபரேஷன்.. அதிமுகவுக்கு எதிராக ரகசியமாக இறங்கிய 2 டீம்? -
சின்ன மாநிலம் தான்.. ஆனால் "தேசிய" அரசியலையே முடிவு செய்யுது.. அசாம் தேர்தல் ஏன் முக்கியம்! -
Election: ஓட்டு போட உங்க நிறுவனத்தில் லீவ் தரலயா? உடனே புகார் அளிக்கலாம்.. எப்படி? -
வானில் தோன்றிய உருவம்.. பழைய ஆம்பாசிடர் காரில் விஐபி!தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் சென்ட்டிமெண்ட் -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்!












Click it and Unblock the Notifications