எல்லாம் வதந்தி.. தமிழ்மக்கள் எங்களை குடும்பம் மாதிரிதான் பாக்குறாங்க.. வட இந்தியர்கள் நெகிழ்ச்சி
நாங்கள் இங்கே பாதுகாப்பாக இருக்கிறோம். மக்கள் அன்பாக இருக்கிறார்கள் என்றுள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டில் வட இந்தியர்கள், முக்கியமாக பீகார் மக்கள் தாக்கப்படுவதாக வைக்கப்படும் பொய்யான புகார்களுக்கு வட இந்தியர்களே பதிலடி கொடுத்து உள்ளனர். சென்னையில் வசிக்கும் வடஇந்தியர்கள் இது தொடர்பாக ஒன்இந்தியா தமிழ் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வட இந்தியர்கள், முக்கியமாக பீகார் மக்கள் தாக்கப்படுவதாக வைக்கப்படும் பொய்யான புகார்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. முக்கியமாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி தமிழ்நாடு வந்த நிலையில், அவருக்கு அழுத்த தர வேண்டும் என்று பாஜக சார்பாக அம்மாநில சட்டசபையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அவர் விளக்கம் அளித்தும் கூட அம்மாநில பாஜக இந்த விவகாரத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த விவகாரத்தில் பொய்யாக செய்தி பரப்பிய சில செய்தி நிறுவனங்கள், சில செய்தியாளர்கள், சில தமிழ்நாட்டை சேர்ந்த பிரபலங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போலீஸ் தெரிவித்துள்ளது.

வடஇந்தியர்கள்
இந்த நிலையில் சென்னையில் வசிக்கும் வடஇந்தியர்கள் இது தொடர்பாக ஒன்இந்தியா தமிழ் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அவர்கள் அளித்த பேட்டிகளின் சுருக்கம் பின்வருமாறு, என் பெயர் ஓம் புஷ்கர், நான் ராஜஸ்தான். நான் வளர்ந்தது இங்கேதான். 50-60 வருஷமாக எங்கள் குடும்பங்கள் இங்கேதான் இருக்கின்றன. தமிழ்நாடு நன்றாக இருக்கிறது. சின்ன வயதில் இருந்து பிறந்து வளர்ந்தோம். ஜாலியாக இருக்கிறோம். ஹாப்பியாக இருக்கிறோம். எனக்கு தமிழ் மக்களை பிடிக்கும். எல்லாம் நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்இந்தியா தமிழ் யூ டியூப்
சென்னையில் வேலை பார்க்கும் உத்தர பிரதேச ஊழியர் பேசுகையில், நாங்கள் இங்கே பாதுகாப்பாக இருக்கிறோம். மக்கள் அன்பாக இருக்கிறார்கள். எங்களை நன்றாக நடத்துகிறார்கள். அம்மா - அப்பாக்கள் பாருங்கள் எங்களை எப்படி நடத்துகிறார்கள் என்று. அவர்களுக்கு எங்கள் நன்றி. நாங்கள் இங்கே பல வருடமாக பிஸ்னஸ் செய்கிறோம். எங்களிடம் எல்லோரும் நட்பாக இருக்கிறார்கள். எங்களை வேறு பிரிவினராக இவர்கள் பார்க்கவில்லை. எங்களை பிரித்து பார்க்கவில்லை, என்று கூறி உள்ளார்.

சவுகார்பேட்டை
சவுக்கார்பேட்டையில் கடை வைத்து இருக்கும் வடஇந்தியர், நாங்கள் இங்கே வந்த பின் முன்னேறி இருக்கிறோம். நாங்கள் வேகமாக முன்னேறி இருக்கிறோம். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இங்கே இல்லை,. எங்களுக்கு ஆபத்து என்பதெல்லாம் இல்லை. எங்களிடம் தமிழ்நாடு கஸ்டமர்கள் நன்றாக நடந்து கொள்வார்கள். எங்களுக்கு நிறைய தமிழ் கஸ்டமர்கள் உள்ளனர். தமிழ்மக்கள் எங்களை குடும்பத்துல ஒருத்தர் மாதிரிதான் பாக்குறாங்க. அதனால் வெளியே பரவும் செய்திகளை எல்லாம் நம்ப வேண்டாம், என்று கூறி உள்ளார்.

பாதுகாப்பு
சென்னை சவுக்கார்பேட்டையில் ரிக்ஸா ஓட்டும் தமிழர் ஒருவர் அளித்த பேட்டியில், நாங்களும் அவங்களும் பல வருடங்களாக ஒன்றாக இருந்து வருகிறோம். எங்களிடம் அன்பாகவே பழகுவார்கள். அவர்களிடம் நாங்களும் அன்பாக பழகுவோம், என்று கூறி உள்ளார். அங்கே கடை வைத்து இருக்கும் தமிழர் ஒருவர், எங்களுக்கும், அவர்களுக்கும் போட்டி எல்லாம் இல்லை. நாங்கள் எல்லாம் சேர்ந்துதான் பிஸ்னஸ் செய்கிறோம். நாங்கள் அவர்களை சார்ந்து இருக்கிறோம். அவர்கள் எங்களை சார்ந்து இருக்கிறார்கள்.

வதந்தி
அவர்கள் களைப்பு இல்லாமல், உடல் சார்ந்து உழைக்கிறார்கள். அவர்கள் நன்றாக வேலை பார்க்கிறார்கள். அவர்களை நம்பி நாமும் இருக்கிறோம். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களை நாம் ஏன் தாக்க போகிறோம். தேவையின்றி வதந்தி பரப்பி வருகிறார்கள். இதை பற்றி பரவும் செய்திகள் பொய்யானது, என்று குறிப்பிட்டு உள்ளார். இணையத்தில் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் பாதுகாப்பிற்கும் எதிராக பல்வேறு பொய்யான பிரச்சாரங்கள் நடந்து வந்த நிலையில், அதை உடைக்கும் விதமாக வடஇந்தியர்கள் நம்மிடம் அளித்த பேட்டியதில் தெரிவித்து உள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications