ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம்.. ஸ்டாலின் பேச்சு.. அதை திறந்ததே நீங்கதானே.. தமிழிசை பதிலடி!
முக ஸ்டாலினின் ஸ்டெர்லைட் ஆலை குறித்த பேச்சினை தமிழிசை விமர்சித்துள்ளார்.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடியே தீருவோம் என்று முக ஸ்டாலின் சொன்னால், அதை திறந்ததே நீங்கள்தானே என்று தமிழிசை சொல்கிறார். இப்படித்தான் இருவருக்கும் ட்விட்டர் போர் ஆரம்பமாகி உள்ளது.
எம்பி கனிமொழி தூத்துக்குடியை தேர்ந்தெடுத்து போட்டியிட காரணமே ஸ்டெர்லைட் விவகாரம்தான். ஸ்டெர்லைட் ஆலை குழுவினருடன் அடிக்கடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதும், அது தொடர்பான போராட்டங்களில் பங்கெடுப்பதுமாக இருந்தார். இதை முன்னெடுத்துதான் பிரச்சாரமும் செய்து வந்தார்.
ஆனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகர், துப்பாக்கி சூடு நடந்தப்போது, கீதா ஜீவன் எங்கே போனார்? கூட்டத்துல முன்னாடி வந்து கீதாஜீவன் நின்றிருந்தால், ஒரு பய சுட்டிருப்பானா? ஒரு உசுரு போயிருக்குமா என்று கேள்வி எழுப்பி பிரச்சாரம் செய்தார்.

திண்ணை பிரச்சாரம்
இந்நிலையில், ஒட்டப்பிடாரத்தில் முக ஸ்டாலின் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலை திமுக ஆட்சியில் மூடப்படும் என்று உறுதி அளித்தார். இதற்கு தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தராஜன் பதிலடி தந்துள்ளார்.
|
கமெண்ட்கள்
தனது ட்விட்டர் பக்கத்தில், "திறந்தது திமுக.. விரிவாக்க அனுமதி அளித்ததும் திமுக? மக்கள் மறக்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
|
ஜெயலலிதா
தமிழிசை ட்வீட்டுக்கு கீழே பலர் கமெண்டாக போட்டு வருகின்றனர். அதில், "தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க 1994- ஆம் ஆண்டு அனுமதி அளித்தது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு" என்கிறது ஒரு ட்வீட்

அடிக்கல்
"1994 அக்டோபர் மாதம் ரூ.1300 கோடி மதிப்பிலான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பங்கேற்றார்!" என்கிறது மற்றொரு ட்வீட்
|
உற்பத்தி
"நீங்களே திறந்து நீங்களே மூடுவதற்கு எதற்கு தொழிற்சாலை, இன்று எவ்வளவு தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன தொழிற்சாலையை புதுப்பித்து மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் உற்பத்தியை துவங்க வேண்டும் அதுதான் வழியே தவிர தொழிற்சாலையை மூடுவேன் என்று சொல்வது அல்ல." என்கிறது இன்னொரு ட்வீட்
|
மறக்கவில்லை
மக்கள் மறக்கவில்லை தான்
அடிக்கல் நாட்டியது அதிமுக
அனுமதி கொடுத்தது அதிமுக
போராடியவர்களை சுட்டுக் கொன்றது அதிமுக
ஆயிரம் பேரைக் காப்பாற்றவே 15 பேரை சுட்டுக் கொன்றோம் என்றது தமிழிசை...
மக்கள் எதையும் மறக்கவில்லை.....!" என்கிறது வேறு ஒரு ட்வீட்

தார்மீக பொறுப்பு
இப்படி தாறுமாறு விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. உண்மையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை யாருமே ஒழுங்கு இல்லை.. எந்த கட்சியுமே சரியான நிலைப்பாட்டில் இல்லை.. இந்த ஆலைக்கு அனுமதி தந்தது முதல், அடிக்கல் நாட்டியது வரை எல்லா கட்சிக்குமே தார்மீக பொறுப்பு உள்ளது என்பதே உண்மை! யாரும் யாரையுமே முழுசா குறை சொல்லவே முடியாது என்பதுதான் கடந்தகால அரசியல் தமிழக மக்களுக்கு தந்துள்ள பாடம்!
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications