யாரோ ஒரு நடிகை கல்யாணத்துக்கு தனி விமானத்துல போனாரே விஜய்! தமிழிசை அட்டாக்
சென்னை: யாரோ ஒரு நடிகை கல்யாணத்துக்கு தனி விமானத்துல போனாரே! என விஜய்யை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கடுமையாக விமர்சித்திருந்தார். மதுரை தவெக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை, விஜய் விமர்சித்ததற்கு தமிழிசை பதிலடி கொடுத்தார்.
இதுகுறித்து தமிழிசை, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: பாரத பிரதமர் மோடி என்ன செஞ்சார்னு கேட்குறார் (விஜய்). இன்னிக்கி யாரோட நடிகை கல்யாணத்துக்கோ தனி விமானத்துல போனாரே, அந்த மாதிரி எல்லா விமான நிலையங்களையும் முன்னேற்றியவர் பிரதமர் மோடிதான்.

ஒரு கொடிய ஒழுங்கா நட முடியல! ஒரு மாநாட்டை ஒழுங்கா நடத்த முடியல, இதுல அடுத்த முதல்வர்னு சொல்றாரு என தமிழிசை, விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் இன்றைக்கு உலகளவில் பிரதமர் நரேந்திர மோடி புகழடைந்து கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் மிஸ்டர் பி.எம். என கூப்பிட்டால் மக்கள் யாரும் ரசிக்க மாட்டார்கள்.
அவர் மாஸ்டர் பி.எம்.ஆக, உலக நாடுகளும் மக்களும் விரும்புகிற பி.எம்.ஆக இருந்து கொண்டிருக்கிறார். விஜய் அரசியலில் புதியவர். அவர் வரவெல்லாம் நம்மை ஒன்றும் செய்யாது. இன்றைய காலகட்டத்தில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக வளர்ந்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஆளும்கட்சியோடு போட்டி என்பது பாஜக கூட்டணிக்குதான். தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாவிட்டாலும், தமிழகத்தில் தாமரை மலரப் போகிறது, வளரப் போகிறது. எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு மலரப் போகிறது. அதை தம்பி விஜய் பார்க்கத்தான் போகிறார்.
விஜய்க்கு வசனம் எழுதிக் கொடுத்தவர், அங்கிள், மிஸ்டர் பி.எம். என எழுதி கொடுத்துவிட்டார். அதைத்தான் அவர் படித்துள்ளார். பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணியா? பொருந்துகிற கூட்டணியா? என்பது குறித்து அவருக்கு என்ன தெரியும்.
அவர் அரசியல் ஞானம் பெறவில்லை என்பதற்கு கச்சத்தீவை பற்றி பேசியதே உதாரணம். இவ்வாறு தமிழிசை விமர்சித்திருந்தார்.
மதுரை மாநாட்டில் விஜய் பேசியது என்ன என்பதை பார்க்கலாம். அவர் பேசுகையில், "தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களே, 3ஆவது முறையாக மத்திய அரசின் அதிகாரத்தை நீங்கள்தானே கையில் வைத்துள்ளீர்களே. ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா?
இஸ்லாமிய நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் சதி செய்யவா? மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது. மக்கள் சார்பாக உள்ளிடம் சில கேள்விகள் கேட்கணும். பிரைம் மினிஸ்டர் அவர்களே! மீனவர்களை பாதுகாப்பதற்காக கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுக் கொடுங்கள். அது போதும்.
மொரட்டு பிடிவாதத்தால் நீட் தேர்வு. நீட் தேர்வால் இங்கே நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. அதனால் நீட் தேர்வே தேவையில்லை என அறிவித்துவிடுங்கள் அது போதும். செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி அவர்களே? என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications