கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், ஒன் இந்தியா தமிழ் சார்பாக கடந்த தேர்தல்களின் போது அரங்கேறிய சம்பவங்கள், வரலாற்று வெற்றிகள், வரலாற்று தோல்விகள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் தகவல் மற்றும் டேட்டா மூலமாக ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 2021 சட்டசபைத் தேர்தலில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்களில் திமுக மற்றும் அதிமுக எத்தனை தொகுதிகளில் வென்றது என்பதை பார்க்கலாம். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் நகர்ப்புறங்களில் 50 தொகுதிகளும், புறநகர்ப் பகுதிகளாக 30 தொகுதிகளும், கிராமப்புறங்களில் 154 தொகுதிகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி நகர்ப்புறங்களில் உள்ள 50 தொகுதிகளில் 40ல் திமுகவும், 10ல் அதிமுகவும் வென்றிருக்கிறது. புறநகர்ப் பகுதிகளில் உள்ள 30 தொகுதிகளில் 23ல் திமுகவும், 7ல் அதிமுகவும் வென்றிருக்கிறது. அதேபோல் கிராமப்புற தொகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட 154 தொகுதிகளில் 96ல் திமுகவும், 58ல் அதிமுகவும் வென்றிருக்கின்றன. அதாவது இந்த 3 வகையான தொகுதிகளிலும் திமுகவின் வாக்கு சதவிகிதம் சீராக ஒரே மாதிரி உள்ளது.
அதாவது நகர்ப்புறங்களில் 46.5% வாக்குகளையும், புறநகர் தொகுதிகளில் 45.8% வாக்குகளையும், கிராமங்களில் 44.9% வாக்குகளையும் பெற்றுள்ளது. ஆனால் அதிமுகவோ நகர்ப்புற தொகுதிகளில் 34.8% வாக்குகளையும், புறநகர் தொகுதிகளில் 37.2% வாக்குகளையும், கிராமங்களில் 41.8% வாக்குகளையும் பெற்றுள்ளது. இதுவே இரு கட்சிகளுக்கும் இடையிலான 5.7% வாக்கு வித்தியாசத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் நகரப்புறங்களில் உள்ள தொகுதிகளில் கடந்த முறை கமல்ஹாசன் அதிகளவிலான வாக்குகளை பெற்றுள்ளார். கமல்ஹாசன் வாங்கிய 2.7% வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் நகரங்களில் இருந்து கிடைத்தவையாக உள்ளது. குறிப்பாக நகரப்பு/ர தொகுதிகள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை கமல்ஹாசன் அதிகமாக பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications