செம பிளானில் அதிமுக.. தமிழக சட்டப்பேரவை இன்று கூடுவதால்.. மீண்டும் புறக்கணிக்க முடிவா..?
இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
சென்னை: 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.. சட்டப்பேரவையை 2 நாட்கள் புறக்கணித்த அதிமுகவினர் இன்றைய கூட்டத்திலும் பங்கேற்குமா என்று தெரியவில்லை.. அதேசமயம், இன்றைய தினமும் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன...!
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கியது... முதல் நாளே, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதற்கு முன்னாடியே, தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்... தமிழகத்திற்கு பல கோடி ரூபாய் கடன் இருக்கிறது, அதற்கு கடந்த அதிமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை தான் காரணம் என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

பதிலுரைகள்
இந்நிலையில், 14ம் தேதி வேளாண் பட்ஜெட்டையும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தார்.. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதல் வேளாண் பட்ஜெட் ஆகும்... இதற்கு பிறகு, தொடர்ச்சியாக துறை சார்ந்த அமைச்சர்கள் தங்கள் பதிலுரைகளை வழங்கினர்... அந்த வகையில், உதயநிதி ஸ்டாலின், வானதி சீனிவாசன் போன்ற புது எம்.எல்.ஏக்களின் கன்னிப்பேச்சு மிகுந்த கவனம் பெற்றது... இதில் கன்னிப்பேச்சு என்ற வார்த்தையே சோஷியல் மீடியாவில் விவாதமானது.

கொடநாடு
இதற்கிடையில் கொடநாடு விவகாரம் பற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது பூதாகரமாக வெடித்தது... அப்போது சபாநாயகர் அனுமதியின்றி பேரவையில் பதாகைகளை காட்டினர்.. அவர்களை அமைதியாக இருக்கையில் உட்காருமாறு சபாநாயகர் அப்பாவு கண்டித்து அறிவுறுத்தினார்... ஆனாலும் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்... பிறகு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்த பேரும் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக
சட்டமன்ற வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பதாகைகளுடன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்... கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், தான் உட்பட கழக நிர்வாகிகள் சிலரை சிக்க வைக்க ஆளுங்கட்சி வேண்டுமென்றே முயற்சிப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.. இப்படி ஒவ்வொரு நாளும் திருப்பங்களுடன் நடந்த சட்டசபை, செப்டம்பர் 21ம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

விவாதங்கள்
பட்ஜெட் மீதான விவாதங்கள் கடந்த 19ம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில், பேரவைக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது... இ்ந்நிலையில் சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது... இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.

துரைமுருகன்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மானிய கோரிக்கையை தாக்கல் செய்து உரையாற்ற இருக்கிறார்.. கோடநாடு விவகாரத்தில் சட்டப்பேரவையை 2 நாட்கள் புறக்கணித்த அதிமுகவினர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. மேலும் இன்றைய தினம் கூட்டத்தை புறக்கணிக்கவும் அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எம்எல்ஏக்கள்
சட்டப்பேரவை நடந்து வரும் அதேசமயம், அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்... கோடநாடு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மனு தரப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது... எதிர்க்கட்சி தலைவர் அறையில் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications