ஜெயலலிதாவை பிரதமர் மோடி கொலை செய்தார் என திமுக எம்எல்ஏ பேசுவதா? பாஜக அமைதியாகவே இருக்காதாம்:அண்ணாமலை
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி கொலை செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் நிர்வாகியும் தற்போதைய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ.வுமான மார்க்கண்டேயன் குற்றம்சாட்டியிருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் 2011-ம் ஆன்டு முதல் 2016-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மார்க்கண்டேயன். ஜெயலலிதா மறைவின் போதும் அதிமுகவில் இருந்தார். பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 2021 சட்டசபை தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வானார்.
இதனிடையே விளாத்திகுளம் அருகே பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மார்க்கண்டேயன், ஜெயலலிதா இறக்கும்வரை அதிமுகவில் நானும் இருந்தேன். ஜெயலலிதா இறந்துவிட்டார். ஜெயலலிதாவை மோடிதான் கொலை செய்துவிட்டார். ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக போட்டியிடப் போவதாக கூறியதால் பாஜக அவரை கொலை செய்துவிட்டது. இதனை பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறோம். பிரதமர் தேர்தலில் தங்களுக்கு போட்டியாக இருக்கக் கூடாது என்பதற்காக கொலை செய்துவிட்டனர் என பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பிவிட்டுள்ளது.

விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசிய வீடியோ ஆங்கில சப் டைட்டிலுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு 10.54 மணிக்குப் பகிர்ந்துள்ளார். அதில், திமுக எம்.எல்.ஏ.க்கள் எப்போதும் பல பொய்களை தொடர்ந்து கூறி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் அமைதியாக இருக்கக் கூடாது; தமிழக பாஜகவும் எப்போதுமே அமைதியாக இருக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications