"தமிழக மண் வந்தடைவார்கள்" இலங்கை சிறைக்கு திடீர் விசிட்! ஜெயிலில் உள்ள மீனவர்களுக்கு உதவிய அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக அண்ணாமலை, அங்குச் சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களைச் சந்தித்தார்.

அண்டை நாடான இலங்கையில் வரலாற்றின் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. அதேபோல மின்சாரம், எரிபொருள் ஆகியவற்றுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கை

இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் உதவிக் கரம் நீட்டியுள்ளன. தமிழ்நாடு அரசும் இலங்கையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணப் பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்ப முடிவு செய்துள்ளது. இது தொடர்பான தனிநபர் தீர்மானமும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

அண்ணாமலை இலங்கை பயணம்

அண்ணாமலை இலங்கை பயணம்

இந்தச் சூழ்நிலையில், சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்போது 4 நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ள அண்ணாமலை, அங்குள்ள தமிழர்களைச் சந்தித்தார். மேலும், அங்கு இருக்கும் கோயில்களிலும் வழிபாடுகளைச் செய்தார்.

12 தமிழக மீனவர்கள் கைது

12 தமிழக மீனவர்கள் கைது

இதனிடையே இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்குச் சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களைச் சந்தித்தார். கடந்த மார்ச் 23 எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை அதிகாரிகள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 தமிழக மீனவர்களைக் கைது செய்து இருந்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர், இப்போது அவர்களைத் தான் அண்ணாமலை சந்தித்துள்ளார்,

Recommended Video

    இந்திய பக்தர்களுக்கு இலவச விசா வழங்கணும்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!
    அண்ணாமலை சந்திப்பு

    அண்ணாமலை சந்திப்பு

    இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இன்று யாழ்ப்பாண சிறையில் நான் இன்று சந்தித்தேன். தமிழக பாஜக சார்பாக அவர்களுக்கு உடை மற்றும் உணவுப் பொருட்டுகளை வழங்கினோம். நமது இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் சிறைபிடிக்கப்பட்ட இந்த மீனவர்கள் விரைவில் நமது தமிழக மண்ணிற்கு வந்து அடைவார்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+