"என்னை சிறையில் அடைத்தாலும்.. ஊழலை வெளியே கொண்டு வருவேன்.." அண்ணாமலை ஆவேசம்
சென்னை: ஊழல் புகார் குறித்த ஆதாரத்தை வெளியிடவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.,
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தமிழக மின் துறையில் பெரியளவில் ஊழல் நடைபெற்று வருவதாகச் சாடி இருந்தார்.
இதற்கான ஆதாரத்தை வெளியிடவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அண்ணாமலை அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்காக, ரூ.355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்திற்கு, முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் மீண்டும் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். இதுதான் திராவிட மாடல். இந்த முறைகேடுகளை முழுமையாக வெளி கொண்டு வர பாஜக போராடும்" என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சர்
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த ஒப்பந்தம் அதிமுக ஆட்சியில் கடந்த 2019இல் போடப்பட்டது என விளக்கம் அளித்தார். மேலும் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை அவர் சொன்னார் என்பதை 24 மணி நேரத்துக்குள் அவர் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்ச செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

சிறையில் அடைத்தாலும் சரி
இந்நிலையில், அண்ணாமலை இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, "எனது மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்லி உள்ளார். தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் அதற்கு நான் காத்துக் கொண்டிருக்கிறேன். இது தொடர்பாக மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தாலும் சரி, உங்களிடம் இருக்கும் காவல் துறை அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தாலும் சரி.

ஊழல்களை வெளிகொண்டு வருவோம்
உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள். அதற்கு நான் தயாராக இருக்கிறோம். ஊழல் செய்யத் தொடங்கும் போது, அதைத் தட்டிக் கேட்பவர்களை இப்படி தான் சிறைக்கு அனுப்புவோம் என்றால் தாராளமாக அனுப்புங்கள். நாங்கள் மகிழ்ச்சியாகச் சிறைக்குச் செல்வோம். ஆனால், அங்கிருந்து மீண்டும் வெளியே வந்து உங்கள் அனைத்து ஊழல்களையும் வெளி கொண்டு வருவோம்.

நாங்களும் ஆட்சியில் உள்ளோம்
அதேநேரம் நீங்கள் மட்டும் ஆட்சியில் இல்லை. நாங்களும் ஆட்சியில் இருக்கிறோம் என்பதையும் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். நஷ்டம் ஏற்படும் நிறுவனத்திற்கு முறைகேடு உதவிகளைச் செய்துள்ளனர். இதையெல்லாம் தணிக்கை செய்யும் போது பல உண்மைகள் வெளியே வரும். இதில் ஊழல் நடந்துள்ளது. நமது அரசியல்வாதிகள் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்ல காரணம் இது தான். அங்கிருந்து போலி நிறுவனங்கள் மூலம் அவர்கள் பணத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருகின்றன. இதில் நேர்மையான விசாரணை நடைபெற்றால் பலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம், போக்குவரத்துத் துறை என முறைகேடுகள் நடைபெற்று வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications