தீவிர ஊரடங்கால் பலன் கிடைக்கிறது.. 2-3 நாட்களில் முழு பலன் கிடைக்கும்.. முதல்வர் ஸ்டாலின் பளீச்
சென்னை: தமிழகத்தில் தீவிர ஊரடங்கால் பலன் கிடைக்க தொடங்கி உள்ளது. இன்னும் 2-3 நாட்களில் முழுமையான பலன் தெரியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவல் லேசாக குறைய தொடங்கி உள்ளது. தினசரி கொரோனா கேஸ்கள் 35 ஆயிரத்திற்கும் அதிகம் இருந்த நிலையில் இது 34 ஆயிரமாக குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா கேஸ்கள் வேகமாக சரிய தொடங்கி உள்ளது.
ஒரு பக்கம் கேஸ்கள் சரிய தொடங்கி உள்ள நிலையில், இன்னொரு பக்கம் மக்கள் வேக்சின் போட ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நிலவரம் மற்றும் வேக்சின் விநியோகம் குறித்து முதல்வ ஸ்டாலின் இன்று விரிவாக பேட்டி அளித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போதுமான படுக்கைகள் மருத்துவமனையில் தயாராக உள்ளது. இன்னும் 2-3 நாட்களில் முழுமையான பலன் தெரியும். தீவிர ஊரடங்கு காரணமாக கொரோனா சங்கிலி உடைக்கப்படும். நேற்று மட்டும் 224543 பேருக்கு கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது.

திமுக
திமுக அரசு பொறுப்பேற்கும் முன் சராசரியாக 66 ஆயிரம் வேக்சின் போடப்பட்டு வந்தது. தற்போது திமுக அரசு மூலம் வேக்சின் சராசரியாக தினமும் 78 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேக்சின் வேஸ்டேஜ் முன்பு 6% ஆக இருந்தது, தற்போது இதை 1% ஆக குறைத்துள்ளோம்.

வேக்சின்
தடுப்பூசி மட்டும்தான் கொரோனாவை தடுக்கும். தமிழக அரசு மிக தீவிரமாக வேக்சின் போட்டு வருகிறது. பெரிய அலுவலகங்கள் மூலம் தங்கள் ஊழியர்களுக்கு வேக்சின் போடும் பணிகள் விரைவில் நடக்கும். நானே வேக்சின் போட்டுள்ளேன். எல்லோரும் வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும்.

அச்சம் வேண்டாம்
வேக்சின் மீது மக்கள் அச்சம் கொள்ள கூடாது. திமுக அரசு பொறுப்பேற்கும் முன் சராசரியாக தினமும் 1.1 லட்சம் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் தற்போது நாங்கள் 1.60 லட்சம் சோதனைகளை தினமும் செய்கிறோம். தினமும் ஆர்டிபிஆர் சோதனையில் தமிழகம்தான் முதல் இடம் வகிக்கிறது.

வேக்சின் டெண்டர்
தமிழகத்திற்கு போதுமான வேக்சின் பல மாநிலங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால்தான் நாங்களே சர்வதேச டெண்டர் விட்டு இருக்கிறோம். நேரடியாக வேக்சின் வாங்க உள்ளோம். தமிழகத்திலும் வேக்சின் தயாரிக்க இருக்கிறோம். இதற்காகத்தான் நேற்று செங்கல்பட்டில் வேக்சின் தொழிற்சாலைக்கு சென்று பார்வையிட்டேன்.

முறியடிப்போம்
இதை தொடங்க சீக்கிரம் பணிகளை செய்ய இருக்கிறேன். தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற போகிறோம். முதல் அலை முடிந்ததும் வேக்சின் மூலம் பரவலை தடுத்து இருக்க வேண்டும். இப்போது தமிழக அரசு வேக்சினை வேகமாக கொடுத்து, கொரோனா பரவல் சங்கலியை தடுப்போம், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications