கொரோனா நிதி வழங்கும் சிறுவர், சிறுமிகளுக்கு திருக்குறள் நூல் பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை: கொரோனா நிதி வழங்கும் சிறுவர், சிறுமிகளுக்கு திருக்குறள் நூல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துளளார்.
கொரோனா பணிகளை மேற்கொள்ள அரசுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

இதனை தொடர்ந்து அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். இவ்வாறு வந்து குவியும் கொரோனா நிதியை தமிழக அரசு வெளிப்படையாக அறிவித்து வருகிறது.
இதுவரை கொரோனா நிதிக்காக 186.15 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா நிதி வழங்கும் சிறுவர், சிறுமிகளுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' தங்களின் சிறு கனவுகளை அடைவதற்காக சிறுக, சிறுக சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை வழங்க முன்வரும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.
எனவே கொரோனா துயர் துடைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறார்கள், சிறுமிகள் உள்ளிட்ட பிள்ளை செல்வங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் உலக பொதுமறையாம் திருக்குறள் நூலொன்று என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications