தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வு ரத்து? விரைவில் அறிவிப்பு வரலாம்!
சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தள்ளதால், தமிழகத்திலும் மாநில பாடத்தில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம்.
100 ஆண்டுகளில் இல்லாத மோசமான தொற்று நோய் பாதிப்பை உலகம் சந்தித்துள்ளது. மொத்த உலகமும் கொரோனவின் கோரப்பிடியால் மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.
ஆக்சிஜனை தேடி உலகமே அலைகிறது. இந்த சூழலில் பள்ளிகளை நடத்த முடியாததால் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள் நடந்து முடிந்த பின்னர், கொரானா பரவல் இந்தியாவில் பரவ தொடங்கியதால், மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது,

தேர்வு ஒத்திவைப்பு
ஆனால் கொரோனா பரவலின் முதல் அலையே நவம்பரில் தான் ஓய்ந்தது. கொரோனாவின் 2வதுலை அடுத்த ஐந்த மாதத்தில் அதாவது மார்ச் மாதம் மீண்டும் உச்சம் பெற தொடங்கியது. இதனால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வுகளை தற்போதைய சூழலில் அடுத்த 3மாதங்களில் கூட நடத்துவது கடினமான சூழலே உள்ளது.,

பிளஸ் 2 தேர்வு ரத்து
இந்நிலையில் கடந்த ஓராண்டாக கல்வி கற்க போதிய வாய்ப்பே பிளஸ் 2 மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளார்.

அன்பில் மகேஷ்
சிபிஎஸ்இ பிளஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்திலும் மாநில பாடத்தில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தமிழகத்தில் பள்ளி கல்வி அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் அண்மையில் கூறும் போது, மத்திய அரசு சிபிஎஸ்இ 12ம் தேர்வை நடத்துவது குறித்து எடுக்கும் முடிவை பொறுத்தே தமிழக அரசும் எடுக்கும் என்று கூறினார்.

விரைவில் அறிவிப்பு
எனவே தற்போது மத்திய அரசு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளது. அதை பின்பற்றி எல்லா மாநிலங்களும் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யும் முடிவினை எடுக்கக்கூடும். அந்த வகையில் தான் தமிழகமும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கான அறிவிப்பு அரசின் சார்பாக எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஏற்கனவே 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 1 முதல் 11ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது பிளஸ் தேர்வும் செய்யப்பட உள்ளதால் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
