சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடப்பாடிக்கு 93.1 பாரன்ஹீட்.. பன்னீர் செல்வத்திற்கு 98.6 பாரன்ஹீட்.. வெளியான டெஸ்ட் ரிசல்ட்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆகியோர் தலைமை செயலகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை செய்து கொண்டனர்.

Recommended Video

    எடப்பாடிக்கு 93.1 பாரன்ஹீட்.. பன்னீர் செல்வத்திற்கு 98.6 பாரன்ஹீட்.. வெளியான டெஸ்ட் ரிசல்ட்

    கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    கொரோனா தடுப்பு தொடர்பாக, தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கடி ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கடி தெளிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா வைரஸ்.. திருச்சியில் தீவிர கண்காணிப்பு வளையத்தில் 65 பேர் கொரோனா வைரஸ்.. திருச்சியில் தீவிர கண்காணிப்பு வளையத்தில் 65 பேர்

    தலைமைச் செயலகம்

    தலைமைச் செயலகம்

    தலைமை செயலகத்துக்கு வரும் உறுப்பினர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்த பிறகே தலைமை செயலகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். செவிலியர்களும் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

    தெர்மல் ஸ்கேனிங்

    தெர்மல் ஸ்கேனிங்

    எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், கே. என். நேரு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெர்மல் ஸ்கிரீனிங் செய்துகொண்ட பிறகே தலைமை செயலகத்துக்குள் செல்கின்றனர். சட்டசபை கூட்டத்தை ஒத்தி வைத்துவிடலாம் என்று, ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.

    டெஸ்ட்

    டெஸ்ட்

    இந்நிலையில் இன்று தலைமை செயலக 10ஆம் எண் நுழைவு வாயிலில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் முதல்வர் உடல் வெப்பநிலை 93.1 பாரன்ஹீட், துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு 98.6 பாரன்ஹீட் என காட்டியது. தொடர்ந்து சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொண்டனர்.

    மாஸ்க் தயாரிப்பு

    மாஸ்க் தயாரிப்பு

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புடன் இருப்பவர்கள் என்95 முக கவசம் அணியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக முகக்கவசங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், ஒரு முறை பயன்படுத்தப்படும், மாஸ்குகளை, மக்கள் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால், முகக் கவசங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்படுவதால் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் மாஸ்க் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy and Deputy Chief Minister O. Panner Selvam were did coronavirus test.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X