முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ''ஆசிரியர் தின'' வாழ்த்து..!
சென்னை: ஆசிரியர் பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ''ஆசிரியர் தின''வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஆசிரியர் பணிக்கு பெருமை தேடி தந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியன்று ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம் என்றும், நாட்டில் அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக்கூடிய ஒரே கருவி கல்வி தான் என்றும் தெரிவித்துள்ளார்.

மாணவக் கண்மணிகளிடம் அன்பையும், அரவணைப்பையும் காட்டி ஆசிரியர் பணிக்கு மிகப்பெரிய பெருமையை தேடி தந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எனக் கூறியுள்ளார். மேலும், அவர் காட்டிய வழியில் மாணாக்கர்களுக்கு நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் கற்பித்து ஆசிரியர்கள் சிறந்த கல்விப் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணாகர்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற திட்டங்களை செம்மையான முறையில் பயன்படுத்தி, சிறந்த மாணவச் செல்வாங்களை உருவாக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், ஆசிரியப் பெருமக்களின் சேவை மெச்சத்தக்கது எனவும், மாணவ சமுதாயத்திற்காக அல்லும் பகலும் உழைக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள் எனவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாளை ஆசிரியர் தினம் கொண்டாடும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் தனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை உரிதாக்கி கொள்வதாக வாழ்த்துச் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications