Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதி 'பேர் சொல்லும் பிள்ளைகள்'-அன்று சமூகநீதிக்காக கனிமொழி! இன்று மாநில உரிமைக்காக ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக நீதிக்காக தந்தை கருணாநிதி வழியில் அவரது மகள் கனிமொழி கருணாநிதி எம்.பி, ராஜ்யசபாவில் கொந்தளித்த காட்சியை நாடே பார்த்தது. இன்று மாநில உரிமைக்காக, தமிழர் நலன் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சட்டசபையில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சீறிய காட்சியை தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு குவிகிறது.

இந்திய விடுதலைக்குப் பிந்தைய தமிழ்நாட்டின் வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் நீக்கமற நிறைந்து இருப்பவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. திராவிடர் பேரியக்கத்தின் அத்தனை கொள்கைகளுக்காகவும் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். அரசியலில் அதி உச்சம் கண்டவர். திராவிடர் இயக்கத்தின் பெருவரலாற்றின் நோக்கங்கள் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தின் சாதனை மகுடங்களாக நிற்பவை.

Tamilnadu CM MK Stalin, Kanimozhi MP proved political heirs of Karunanidhi

கருணாநிதிக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசுகளான இன்றைய தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினு, கனிமொழி எம்பியும் அந்த அளவுக்கு ஆலமரம் போல திராவிடர் இயக்கத்தின் நம்பிக்கை விழுதுகளாக நிற்பார்களா? என்பது பொதுவான ஐயமாகத்தான் இருந்தது. ஆனால் கருணாநிதியின் பிள்ளைகள் அப்படி எல்லாம் சளைத்துப் போகிறவர்கள் இல்லை என்பதை அண்ணனும் தங்கையும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Tamilnadu CM MK Stalin, Kanimozhi MP proved political heirs of Karunanidhi

2019-ம் ஆண்டு, திராவிடர் இயக்கத்தின் அடிநாதமான இடஒதுக்கீட்டு கொள்கைக்கு புதைகுழி தோண்டுகிற உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. சமூக அநீதிக்கு எதிராக ராஜ்யசபாவில் கர்ஜித்தார் கனிமொழி. அதுவும், தமது கூட்டணிக் கட்சியின் எம்பியான, தமிழ்நாட்டைச் சேர்ந்த ரங்கராஜன் எம்பி, 10% இடஒதுக்கீடு அநியாயத்தை ஆதரித்து பேசிய அந்த தருணம்.. இருக்கையை விட்டு கொந்தளிப்புடன் எழுந்து ரங்கராஜன் எம்பியை நோக்கி இது நியாயமா? என்னங்க இது அநியாயமே இருக்கே என சீறிய அந்த கோபம்.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டை கொண்டாட வைத்தது. ஆம் கனிமொழியின் அந்த கோபம் திராவிடத்தின் கோபம்.. கனிமொழியின் கோபம், தந்தை கருணாநிதியின் ஆவேசத்தின் வெளிப்பாடு. அப்பாவின் பெயரை தப்பாமல் காப்பாற்றிய அருந்தவப் புதல்வி என போற்றப்பட்டார் கனிமொழி.

Tamilnadu CM MK Stalin, Kanimozhi MP proved political heirs of Karunanidhi

அதேபோல்தான் தந்தை கருணாநிதியின் பெயரை காப்பாற்றி இருக்கிறார் மகனும் தமிழ்நாட்டின் முதல்வருமாகிய ஸ்டாலின். மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் இணக்கமாகவே இருக்கிறது திமுக அரசு என்றெல்லாம் விமர்சனங்கள் பலமுறை வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு முறையிலும் செயலில் திராவிடர் இயக்கத்தின் அடுத்த தலைமுறையின் வேகத்தை அப்படி ஒரு பாய்ச்சலாக வெளிப்படுத்துகிறார் ஸ்டாலின். சென்னையில் பிரதமர் மோடியை மேடையில் வைத்து கொண்டு திராவிட மாடல் குறித்து வகுப்பு எடுத்ததைவிட அதி உச்சம் தமிழ்நாட்டு சட்டசபை நிகழ்வு.

தமிழ்நாடு ஆளுநர் ரவி, தன்னிச்சையாக சட்டசபையில் செயல்பட்டதை அவர் இருக்கையில் அமர்ந்திருக்கும் போதே, முகத்துக்கு நேராக அசால்ட்டாக ஒரு கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற.. அதை எதிர்பார்க்காத ஆளுநர் ரவி, சபையில் இருந்து வெளிநடப்பு செய்ய.. அதை திராவிடப் பெருமிதம் பொங்க கண்களால் ரசித்த அந்த நிமிடங்கள்.. அப்பப்பா அப்பா கருணாநிதியின் பெயரை பிள்ளை ஸ்டாலின் காப்பாற்றிவிட்டதை பட்டவர்த்தனமாகவே வரலாற்றில் பதிவு செய்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு முதுகெலும்பு கொண்ட மக்கள் தேசமாக திகழ்கிறது என்பது மிகையும் அல்ல என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+