Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்.. 1,312 பேருக்கு பாதிப்பு! எங்கெல்லாம் பாதிப்பு அதிகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,91,552 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    #Covid-19 Update தமிழகம்: குறைந்து கொண்டே வரும் கொரோனா!

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. அதுவும் முன்பு போல் இல்லை.

    பெரும்பாலான மாவட்டங்கள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து இயல்புநிலையை நோக்கி சென்றுவிட்டன. பல மாவட்டங்களில் மிக மிக குறைவான பாதிப்பே உள்ளது

    எவ்வளவு

    எவ்வளவு


    தமிழகத்தில் டிசம்பர் 7ம் தேதி நிலவரப்படி சுகாதாரத்துறை கொரோனா நிலவரத்தை வெளியிட்டுள்ளது. இன்று கொரோனா தொற்றால் 1,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,91,552 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பலி

    கொரோனா பலி

    தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் 16 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் 11,809 பேர் மரணம் அடைந்துள்ளனர். சென்னையில் இன்று 7 பேரும், திருவள்ளூரில் கோவை 2 பேரும் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,389 பேர் மீண்டனர். தமிழகத்தில் இதுவரை 7,69,048 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

    சென்னையில் அதிகம்

    சென்னையில் அதிகம்

    சென்னையில் 307 பேருக்கும், கோவையில் 124 பேருக்கும், சேலத்தில் 72 பேருக்கும், திருவள்ளூரில் 69 பேருக்கும், திருப்பூரில் 75 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 87 பேரும்., ஈரோட்டில் 56 பேரும், வேலூரில் 46 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 40 பேருக்கும், மதுரையில் 42 பேருக்கும், திருச்சியில் 41 பேருக்கும் , தஞ்சாவூரில் 36 பேருக்கும், கன்னியாகுமரியில் 26 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பரிசோதனை எவ்வளவு

    பரிசோதனை எவ்வளவு

    தமிழகத்தில் கொரோனாவை கண்டுபிடிக்க பிசிஆர் பரிசோதனை தீவிரமாக நடக்கிறது. இன்று மட்டும் 64,010 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,25,40,103 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 63,547 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,22,46,191 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 10,695 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+