18 மாவட்டங்களில் 10க்கும் கீழ் சரிந்த கொரோனா.. இந்த 2 மாவட்டங்களில் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று 18 மாவட்டங்களில் 10க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 2 மாவட்டங்களில் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் வரும் நவ, 30 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது. இருப்பினும், சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட வேக்சின் பணிகளால் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் வைக்கப்பட்டது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1.01 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் மொத்தம் 782 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 53 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,17,203 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
தமிழ்நாட்டில் பல வாரங்களாகவே கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1% கீழாகவே இருந்து வருகிறது. தற்போது மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.8%ஆக உள்ளது. இது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகும். எந்தவொரு மாவட்டத்திலும் பாசிட்டிவ் விகிதம் 1.4%ஐ தாண்டவில்லை. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.9%ஆகவும் கோவையில் 1.3% ஆகவும் உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகத் தலைநகர் செங்கல்பட்டில் 3 பேரும் கோவை, சேலம், வேலூர் மாவட்டங்களில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,324 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் புதிய கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருவதால் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. நேற்று 9,349ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 9,211ஆகக் குறைந்துள்ளது மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 907 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,71,668 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட ரீதியான பாதிப்பில் சென்னையில் 116 பேருக்கும் கோவையில் 115 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் இல்லை. அதேபோல தமிழ்நாட்டில் உள்ள 18 மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது. குறிப்பாகத் தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications