தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்புகள் இல்லை! 23 மாதங்களுக்கு பின் இதுவே முதல்முறை
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த டிச மாதம் பரவ தொடங்கிய ஓமிக்ரான் மெல்ல வேகமெடுத்தது. இதனால் மாநிலத்தில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது.
இதையடுத்து மாநிலத்தில் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. கடந்த பிப். மாதமே கிட்டதட்ட அனைத்து தளர்வுகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு
மார்ச் 11ஆம் தேதிக்கான கொரோனா பாதிப்பு விவகாரத்தைச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ( மார்ச் 11) மாநிலத்தில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 112 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,51,710ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் 42 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.3%ஆக குறைந்துள்ளது. குறிப்பாகச் சென்னையில் பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. ஒரு கட்டத்தில் 30% வரை சென்ற பாசிட்டிவ் விகிதம் இப்போது 0.7ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் எந்தவொரு மாநிலத்திலும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1ஐ தாண்டவில்லை.

உயிரிழப்பு
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே 10க்கும் குறைவாகவே கொரோனா உயிரிழப்புகள் இருந்து வந்தது. இந்நிலையில், மார்ச் 11ஆம் தேதி மாநிலத்தில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை, தமிழகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 30இல் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. அதன் பின்னர் சுமார் 23 மாதங்களுக்குப் பின்னர் கொரோனாவால் நேற்று (மார்ச் 11) யாரும் உயிரிழக்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 38023 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் மாநிலத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது. மார்ச் 10ஆம் தேதி 1,676ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் மார்ச் 11இல்1,461ஆக குறைந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 327 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,12,226ஆக உயர்ந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications