கட்டுக்குள் வரும் கொரோனா பாதிப்பு.. எந்தவொரு மாவட்டத்திலும் 100+ பாதிப்பு இல்லை.. முழு தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 366 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆக்டிவ் கேஸ்களும் 5,745ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஜன. 22ஆம் தேதி தினசரி வைரஸ் பாதிப்பு 30,700 வரை சென்றது. இருப்பினும், அதன் பின்னர் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது.

ஏற்கனவே கொரோனா 3ஆம் அலை தமிழகத்தில் முடிந்துவிட்டதாகக் கருதலாம் என்று அமைச்சர் மா.சு தெரிவித்திருந்தார். அதேபோல பெரும்பாலான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

 தினசரி பாதிப்பு

தினசரி பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில்,366 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,49,373ஆக உயர்ந்துள்ளது. அதேபோல பாசிட்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 0.8ஆக இருந்த பாசிட்டிவ் விகிதம் இன்று 0.7ஆக மேலும் குறைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, திருவள்ளூர் என 5 மாவட்டங்களில் மட்டுமே பாசிட்டிவ் விகிதம் 1க்கு மேல் உள்ளது.

 ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

அதேபோல தமிழகத்தில் ஆக்டிவ் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று 6,393 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 5,745ஆக குறைந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 1,013 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,05,624ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

மேலும், தினசரி கொரோனா உயிரிழப்பும் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருந்து வருகிறது. ஓமிக்ரான் அலை சமயத்தில் 50 வரை சென்ற தினசரி உயிரிழப்புகள், கடந்த சில நாட்களாகவே 10க்கும் கீழாகவே உள்ளது. இன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். இதுவரை தமிழ்நாட்டில் 38,004 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாநிலத்தில் இன்று எந்தவொரு மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு 100ஐ கடக்கவில்லை. தலைநகர் சென்னையில் இன்று 96 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோவையில் 54 பேருக்கும் செங்கல்பட்டில் 40 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கு கீழாகக் குறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+