சூப்பர்!19 மாவட்டங்களில் 10க்கு கீழ் குறைந்த கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை
சென்னை: தமிழ்நாட்டில் வேக்சின் பணிகள் காரணமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று 750 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 3 மாவட்டங்களில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.
Recommended Video
கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு அதன் பிறகு மெல்லக் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மாநிலத்தில் வரும் நவ, 30 தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக நடைபெற்று வரும் வேக்சின் பணிகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1.01 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் மொத்தம் 750 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 49 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,21,021 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.8%ஆக உள்ளது. அதிகபட்சமாகக் கோவையில் பாசிட்டிவ் விகிதம் 1.9% ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.9%ஆக தொடர்கிறது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மொத்தம் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகத் திருப்பூரில் 3 பேரும் சென்னையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,388 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் புதிய கொரோனா கேஸ்கள் குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 8,722ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 8,616ஆகக் குறைந்துள்ளது மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 843 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,76,017 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
அதிகபட்சமாகக் கோவையில் 125 பேருக்கும் சென்னையில் 110 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் இல்லை. அதேபோல தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது. குறிப்பாகப் பெரம்பலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications