கோவையில் மீண்டும் 200ஐ கடந்த கொரோனா.. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1564 பேருக்கு வைரஸ் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1564 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கோவையில் மட்டும் தினசரி வைரஸ் பாதிப்பு 200ஐ கடந்துள்ளது.

Recommended Video

    Radhakrishnan விளக்கம் | Nipah Virus | School மீண்டும் மூடப்படுமா? | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. இதையடுத்து அப்போது முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரே வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

    இப்போது கூடுதல் தளர்வுகளுடன் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளால் எங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என் அஞ்சப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக வைரஸ் பாதிப்பு கட்டுக்குள்ளேயே தொடர்ந்து இருந்து வருகிறது.

    தினசரி கொரோனா பாதிப்பு

    தினசரி கொரோனா பாதிப்பு

    தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1564 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 1,55,609 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 97 சிறார்கள் உட்பட மொத்தம் 1564 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 26,24,234 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 1 ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.7%ஆக பாசிட்டிவ் விகிதம் உள்ளது.

    கொரோனா உயிரிழப்புகள்

    கொரோனா உயிரிழப்புகள்

    இன்று கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 18 உயிரிழந்துள்ளனர். அவர்களில் 12 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இன்று உயிரிழந்தவர்களில் ஒருவர் எவ்வித இணை நோய்களையும் கொண்டிருக்காதவர்கள், 2 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் ஆகும். அதிகபட்சமாகச் சென்னை மற்றும் தஞ்சையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 35,036 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

    ஆக்டிவ் கேஸ்கள்

    ஆக்டிவ் கேஸ்கள்

    தமிழ்நாட்டில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று ஆக்டிவ் கேஸ்கள் 16,282ஆக இருந்த நிலையில், இன்று அது 16,256ஆக மேலும் குறைந்துள்ளது. இது தவிரக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் 1,564 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 25,72,942 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

    மாவட்ட வாரியாக பாதிப்பு

    மாவட்ட வாரியாக பாதிப்பு

    மாவட்ட வாரியான பாதிப்பில் இன்று கோவையில் தான் அதிகமாக உள்ளது. கடந்த வாரம் சில நாட்கள் வைரஸ் பாதிப்பு 200க்கும் கீழ் சென்றிருந்த நிலையில், இன்று அங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் 200ஐ கடந்துள்ளது. கோவையில் இன்று மொத்தம் 206 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சென்னையில் 169 பேருக்கும், செங்கல்பட்டில் 110 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+