சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

4 மணி நேர கேப்தான்.. ஹெலிகாப்டரை எடுத்து.. விர்ர்ன்னு கோவைக்கே கிளம்பி சென்ற கமல்.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் வாக்களித்துவிட்டு அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் கோவை தெற்கு தொகுதிக்கு புறப்பட்டு சென்றார்.

Recommended Video

    மகள்களுடன் வந்து வாக்களித்த Kamal..நடிகை ஸ்ரீபிரியாவும் வாக்களிப்பு!

    தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணியில் இருந்து விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கு தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குப்பதிவாகி உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இன்று காலையிலேயே சென்னையில் வாக்களித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷராஹாசனும் உடன் வந்து வாக்களித்தார்.

    கோவை

    கோவை

    அதிகாலையிலேயே வந்து வாக்களித்த கமல்ஹாசன் அதன்பின் நேராக கிளம்பி கோவைக்கு சென்றார். சென்னையில் 7.30 மணிக்கு வாக்களித்த கமல்ஹாசன், ஹெலிகாப்டர் மூலம் உடனே கோவைக்கு புறப்பட்டு சென்றார் . காலை 11 மணிக்கு முன்னதாக கோவைக்கு வந்த கமல், அங்கிருந்து கோவை தெற்கு தொகுதிக்கு காரில் சென்றார்.

    கோவை தெற்கு

    கோவை தெற்கு

    வெறும் 4 மணி நேரத்தில் சென்னையில் இருந்து கோவை சென்று.. கோவை தெற்கில் கமல் தனது தொகுதி நிலவரத்தை பார்வையிட்டார். அங்கு இருக்கும் வாக்கு சாவடிகளுக்கு சென்று நிலவரத்தை பார்வையிட்டார். மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள், ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்று சோதனை செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசி கமல்ஹாசன், மக்கள் ஆர்வமாக வாக்களிக்கிறார்கள். தேர்தல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

    பணப்பட்டுவாடா

    பணப்பட்டுவாடா

    ஆனால் கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. மக்களிடம் காசு கொடுத்து வாக்குகளை வாங்க பார்க்கிறார்கள். டோக்கன் கொடுக்கும் பணிகளும் நடக்கிறது. வெளியே பணப்பட்டுவாடா அதிகமாக நடக்கிறது.

    டோக்கன்

    டோக்கன்

    இப்போது டோக்கன் கொடுக்கிறோம், பின் பொருளாக, பணமாக வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் இதை தட்டிகேட்கவில்லை. இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் கமல்ஹாசன் நேரில் சென்று புகாரும் அளித்துள்ளார்.

    English summary
    Tamilnadu elections: After casting vote in Chennai, Kamal Haasan went to Coimbatore South.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X