"கரண்ட் பில்" கட்டணம் மீண்டும் உயர்கிறதா.. தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வுக்கு காரணம்? எப்போது அமல்?
சென்னை: மின்கட்டணம் மறுபடியும் உயர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. அநேகமாக அடுத்த மாதம் முதல், கரண்ட் பில் உயர்வு குறித்த அறிவிப்பு வரலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி சுமையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு மின் வாரியம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் மின் கட்டணத்தை கடந்த வருடம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, மின் நுகர்வு மற்றும் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்து, கட்டண உயர்வுக்கு அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18-ம் தேதி மனுக்களை சமர்ப்பித்தது.
மின் கட்டணம்: ஆனால், மின் கட்டணத்தை உயர்த்த அரசியல் கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பின.. எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு. கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாததால், இப்போது கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மின் வாரியம் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

இதற்கு பிறகு, வழக்கு விசாரணைகளும் நடந்த நிலையில் இறுதியில், மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க விதித்த தடையை மதுரை ஹைகோர்ட்டும் விலக்கியிருந்தது. இதையடுத்து, மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.
கரண்ட் பில்: புதிய மின் கட்டண உயர்வும் தமிழகத்தில் அமலானது.. வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதுடன், வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிப்பும் வெளியானது. அதுமட்டுமல்ல, ஆண்டுதோறும் ஜுலை 1-ம் தேதி 6 சதவீத மின் கட்டணத்தை உயர்த்தவும் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது..
கடந்த செப்டம்பரில்தான் கரண்ட் பில் கட்டணம் உயர்த்தப்பட்டது.. ஆனால், வருடா வருடம் ஜுலையில் மின்கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி தந்துள்ளதார், இந்த ஜூலை மாதம் கரண்ட் பில் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, 9 மாதங்களே ஆன நிலையில், ஜூலை 1 முதல் கூடுதலாக, 4.70 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
கட்டணம் உயர்வா: 2023 ஏப்ரல் மாத நிலவரப்படி, பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம், இரண்டில் எது குறைவோ, அந்த அளவு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் பணவீக்க விகிதம், 4.70 சதவீதமாக இருக்கிறது.. இது 6 சதவீத அளவுடன் ஒப்பிடும்போது குறைவுதான்.. அதனால், அடுத்த மாதம் முதல், அனைத்து பிரிவு கட்டணமும் 4.70 சதவீதம் உயர்த்தப்பட நிறையவே வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
அதாவது, இப்போதுள்ள யூனிட் கட்டணம் எவ்வளவோ, அதில் 4.70 சதவீதம் உயரக்கூடும் என தெரிகிறது. ஏற்கனவே உயர்த்திய மின் கட்டணத்தை செலுத்த முடியாமல், அவதியில் உள்ளபோது, இன்னொரு முறை மின்கட்டணத்தை உயர்த்திவிட்டால், பெரும் நெருக்கடியாகிவிடுமே என்று பொதுமக்கள் கலங்கி போயுள்ளனர்..
ஒரே வழி: மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் என்பது, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மட்டுமே உள்ளது. எனவே, அந்த ஆணையை நிறுத்தி வைக்குமாறு, ஆணையத்திடம் முதல்வர் வலியுறுத்தினால், இந்த மின்கட்டண உயர்வு இப்போதைக்கு வர வாய்ப்பில்லை என்கிறார்கள்.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications