நேற்று வரை 2தான்.. இன்று 3வது நல்ல செய்தி.. கொரோனாவை வெல்லும் பாதை.,. பயணிக்க தொடங்கிய தமிழ்நாடு!
சென்னை : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவு, ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை சரிவை தொடர்ந்து 3வதாக தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு விகிதமும் இன்று முதல் குறைய தொடங்கி உள்ளது. கொரோனாவை வெல்வதற்கான பாதையில் தமிழ்நாடு பயணிக்க தொடங்கிவிட்டதை காட்டுகிறது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் இறுதியில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்தது. வெறும் 1500 என்கிற நிலையில் இருந்து அடுத்த ஒன்றரை மாதத்தில் 36 ஆயிரம் என்கிற நிலையில் அடைந்தது.
கொரோனா பரவல் என்பது தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து தான் உச்சம் பெற தொடங்கியது. மே மாதம் கொரோனா பாதிப்பு 36 ஆயிரம் என்கிற நிலையை எட்டியது.

அதிகரிப்பு ஏன்
இதையடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை கடந்த மே 10ம் தேதி அறிவித்தார். அதன்பிறகும் கொரோனா பரவல் குறையவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியில் சென்றதும், காவல்துறையினர் அவர்கள் மீது மென்மையான போக்கை கடைபிடித்ததும் காரணமாக இருந்தது.

ஸ்டாலின் உத்தரவு
இதையடுத்து பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின், ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தார். அத்துடன் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பின்னரே கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. எனினும் மே24ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்பட்ட தளர்வுகளற்ற ஊரடங்கு தான் கொரோனா பரவல் பெரிய அளவில் குறையாக காரணமாகி உள்ளது,

குறைந்த பாதிப்பு
தமிழ்நாட்டிற்கு முதலாவது நல்ல செய்தி என்பது மே இறுதியில் இருந்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதான். இன்றுடன் 13வது நாளாக தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. அதுவும் 25 ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது. இரணடாவது நல்ல செய்தி, கடந்த வாரத்தில் இருந்து ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை சரிய தொடங்கியது. குணம் அடைந்து வீடு திருப்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இறப்பு சரிவு
மூன்றாவது நல்ல செய்தி கொரோனா இறப்பு குறைந்து வருவது தான். தமிழ்நாட்டின் கொரோனா இறப்பு ஜூன் 1 ஆம் தேதி 490 ஆக இருந்த நிலையில், இன்று 460 ஆக குறையத் தொடங்கி உள்ளது. இறப்பு விகிதம் கீழ்நோக்கி செல்வதை இந்த புள்ளி விவரம் காட்டுகிறது. இதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கையும் தொடர்ந்து தமிழகத்தில் சரிந்து வருகிறது. இன்று 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சரிந்து 2,80,426 ஆக உள்ளது.
|
கோவிட் டேட்டா
தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பும் இன்று 24,405 ஆக குறைந்துள்ளது. இந்த புள்ளி விவரங்களை பார்க்கும் போது தமிழ்நாடு கொரோனாவில் இருந்து மீள தொடங்கிவிட்டது என்பது, அதற்கான பாதையில் செல்ல தொடங்கிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது என்று கோவிட் டேட்டா அனலிஸ்ட் விஜயானந்த் தெரிவித்துள்ளார்.
-
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications