சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேக்சின் முகாமை நிறுத்துகிறோம்.. கொந்தளித்த தமிழக அரசு.. உடனே சென்னைக்கு வந்த 4.20 லட்சம் வேக்சின்!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு தமிழகத்திற்கு கொரோனா வேக்சின் அளிப்பதில் தாமதம் செய்வதாக மக்கள் கொந்தளித்ததை அடுத்து 4.20 லட்சம் டோஸ் வேக்சின் இன்று சென்னைக்கு அனுப்பப்பட்டது.

தமிழ்நாடு தற்போது கொரோனா வேக்சின் அளிப்பதில் வேகம் காட்டி வருகிறது. தினமும் 2.5 - 3 லட்சம் வீதம் டோஸ்களை தமிழ்நாட்டு அரசு மக்களுக்கு செலுத்தி வருகிறது. மே மாத தொடக்கத்தில் வேக்சின் போடுவது மெதுவாக இருந்தாலும், கடந்த 10 நாட்களாக தமிழக அரசு மிக தீவிரமாக வேக்சின் செலுத்தி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில், மக்கள் ஆர்வமாக வேக்சின் போட முன் வந்துள்ள நிலையில் போதுமான வேக்சினை அளிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. தமிழகத்திற்கு தேவையான வேக்சினை உடனே அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

அறிவிப்பு

அறிவிப்பு

இந்த நிலையில்தான் வேக்சின் தட்டுப்பாடு காரணமாக வேக்சின் போடுவதை நிறுத்துகிறோம் என்றும் கூட தமிழக அரசு வெளிப்படையாக அறிவித்தது. இது தொடர்பாக நேற்று தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசி இருந்தார். அதில், மே மாதத்திற்கு வர வேண்டிய டோஸ் கணக்கு 20.43 லட்சம், அதில் தமிழகத்திற்கு 18.67 லட்சம் டோஸ் வந்துள்ளது. 1.74 டோஸ் இன்னும் தமிழகத்திற்கு வர வேண்டும்.

இன்னும் வரவில்லை

இன்னும் வரவில்லை

மே மாதத்திற்கு வர வேண்டிய மீதமுள்ள டோஸ் இன்னும் வரவில்லை. இது இன்னும் வராத நிலையில் ஜூன் மாதத்திற்கான வேக்சின் எப்போது வரும் என்றும் தெரியவில்லை. ஜூன் மாதம் 40.58 லட்சம் டோஸ் தமிழகம் வர வேண்டும். முதல் சப்ளை ஜூன் 6ம் தேதி அல்லது 9ம் தேதிதான் வரும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை வேக்சின் காலியாகிவிடும். தமிழகத்தில் ஜூன் 3 முதல் 5 வரை தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

காலியாகிவிடும்

காலியாகிவிடும்

இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் ம. சுப்பிரமணியனும் தமிழகத்தில் ஜூன் 3 முதல் 5 வரை தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படும் என்று அறிவித்தார். அதுபோல் சில மாவட்டங்களில் இன்றே வேக்சின் போடுவது நிறுத்தப்பட்டது. இவர்களின் அறிவிப்பை தொடர்ந்து தமிழக மக்கள் பலர் இணையத்தில் வேக்சின் கேட்டு கொந்தளித்தனர். மத்திய அரசு தமிழகத்திற்கு கொரோனா வேக்சின் அளிப்பதில் தாமதம் செய்கிறது, தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று கொந்தளித்தனர்.

.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

#BJPBetrayingTNPeople என்ற டேக் உருவாக்கப்பட்டு இணையத்தில் மக்கள் பலர் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை வைத்தனர். காலையில் இருந்து இந்த டேக் வைரலாக சென்றது.
தமிழக அரசின் அறிவிப்பு மற்றும் மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து 4,20,570 கோவிஷீல்டு டோஸ்கள் சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்தது. காலையில் மக்கள் கொந்தளித்த நிலையில் மாலையில் வேக்சின் சென்னை வந்தது

முன்பு

முன்பு

கடந்த 29ஆம் தேதி 58,410 கோவாக்சின் தடுப்பூசி தமிழகத்திற்கு கடைசியாக வந்தது. அதன்பின் இன்று 4,20,570 கோவிஷீல்டு டோஸ்கள் புனேவில் இருந்து மத்திய அரசு தமிழகம் வந்தது. நேற்று 89,32,000 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. தற்போது வரை உள்ள கையிருப்பில் 6-7 லட்சம் டோஸ் வேக்சின் மூலம் இன்னும் 2 -3 நாட்களுக்கு வேக்சின் போட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu gets 4.20 lakhs doses vaccine after the state government and people complaint of shortage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X