சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓய்வுபெற்ற நீதியரசர்.. "ஜெய்பீம் நிஜ ஹீரோ" சந்துருவிற்கு தமிழக அரசின் அம்பேத்கர் விருது அறிவிப்பு!

நீதிபதி சந்துருவுக்கு அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் முன்னேற்றத்துக்கு அரும்பாடுபட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது...!

2021ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான பெரியார் விருது க.திருநாவுக்கரசுக்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது....

கிடைத்தது 4 வாரம் ஜாமீன்.. சிறையிலிருந்து ரிலீசாகிறார் ராஜேந்திர பாலாஜி.. உச்சநீதிமன்றம் உத்தரவு கிடைத்தது 4 வாரம் ஜாமீன்.. சிறையிலிருந்து ரிலீசாகிறார் ராஜேந்திர பாலாஜி.. உச்சநீதிமன்றம் உத்தரவு

அந்த வகையில், திராவிட இயக்க ஆய்வாளரும் எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு பெரியார் விருதை பெறுகிறார்... 2006ல் தமிழ்நாடு அரசின் திரு.வி.க விருதை க.திருநாவுக்கரசுக்கு வழங்கி கவுரவித்திருந்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

 விருது அறிவிப்பு

விருது அறிவிப்பு

அதேபோல, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு அரும்பாடுபட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது... தமிழ்நாடு அரசின் விருது தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். விருது தொகையுடன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைகோர்ட்

ஹைகோர்ட்

சென்னை ஹைகோர்ட்டில் 30 வருடங்களாக வழக்கறிஞராக வேலை பார்த்தவர் சந்துரு.. இந்த 30 வருடங்களில் அவர் பெருமளவு வாதாடியது, ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காகத்தான்.. இதற்காகவே பொது நல வழக்குகள், மனித உரிமை வழக்குகள், பெண்கள் உரிமை வழக்குகள் போன்றவற்றை எடுத்து வாதாடினார்.. அவர்களின் நலனில் நேரடியாகவே அக்கறை கொண்டார்.. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், சந்துரு வக்கீலாக பணியாற்றியதுவரை, மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளுக்கு பீஸ் வாங்கியதே கிடையாது..

 இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

தன் வாழ்நாளில் எந்த ஒரு மனித உரிமை வழக்குகளுக்கும் ஒரு ரூபாய்கூட பீஸ் வாங்காதவர்.. இந்த குணம் அபூர்வமானது.. உயரிய நோக்கம் கொண்டது.... பஞ்சமி நிலங்களை யாருக்கும் ஒதுக்க கூடாது, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்க வேண்டும், கோவில்களில், பெண்கள் பூஜை செய்வதற்கு எந்த தடையும் இல்லை, மாட்டிறைச்சி கடைகள் நடத்த தடை இருந்ததை நீக்கியது என தமிழகம் சந்தித்த மிக முக்கிய வழக்குகளில், வரலாற்றில் பதியக்கூடிய தீர்ப்புகளை வழங்கியவர்..!

தீர்ப்புகள்

தீர்ப்புகள்

நீதிபதியாக இருந்து 96 ஆயிரம் கேஸ்களுக்கு தீர்ப்பு வழங்கிய பெருமைக்கு சொந்தக்காரர்.. இந்தியாவிலேயே இத்தனை கேஸ்களுக்கு எந்த நீதிபதியும் இப்படியான தீர்ப்புகளை வழங்கியது இல்லை.. இதையெல்லாம் வெறுமனே தீர்ப்பு என்று மட்டுமே எடுத்து கொண்டு கடந்து விட முடியாது.. ஒவ்வொரு தீர்ப்புக்கு பின்பும், சந்துருவின் அபரிமிதமான உழைப்பு இருந்தது..!

நம்பிக்கை

நம்பிக்கை

தனிப்பட்ட முறையிலும் மிக எளிமையானவர் சந்துரு.. யாராக இருந்தாலும் இவரை எளிதில் சந்திக்கலாம்.. எதை பற்றி வேண்டுமானாலும் விவாதிக்கலாம்.. சக மனிதர்கள் மீது நம்பிக்கையை ஆழமாக வைத்திருப்பவர்.. அதனாலேயே தன்னை சுற்றி எந்தவிதமான பாதுகாப்பையும் வைத்து கொள்ளாதவர்.. கோர்ட்டில் வக்கீல்கள் தன்னை மை லார்ட் என்று கூப்பிடக்கூடாது என்று உத்தரவிட்டவர்.. ஹைகோர்ட்டின் வழக்கமான சம்பிரதாயங்களை நொறுக்கி, எளிமையின் தோற்றத்தை ஏற்படுத்தியவர்.. "நமக்கும் இங்கே நீதி கிடைக்கும்" என்று அடித்தட்டு மக்கள் கோர்ட்டில் நுழைவதற்கான நம்பிக்கையை இவரது முயற்சி ஏற்படுத்தியது..

 மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஜெய்பீம் படத்தின் நிஜஹீரோவே சந்துருதான்.. நிஜ வாழ்க்கையில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தை தான் அப்படியே சூர்யா நடித்து இருந்தார்... இன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் முன்னேற்றத்துக்கு அரும்பாடுபட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. சந்துரு போன்ற மனிதர்களே இந்த ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக திகழ்ந்து வருகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை..!

English summary
Tamilnadu Government Ambedkar award for Rtd judge justice Chandru
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X