தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 5 பொது விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு.. ஊழியர்கள் ஹேப்பி அண்ணாச்சி!
சென்னை: தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் நவ. 5 அன்று பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை வந்த நிலையில் வெள்ளிக்கிழமை நவம்பர் 5 அன்று அனைத்து அரசு, கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பொதுவாக ஏதாவது பண்டிகை நாள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை ஒட்டி வந்தால் அதற்கு முன்போ, பின்போ விடுமுறை அளித்தால் பொதுமக்கள் வெளியூர் செல்ல வசதியாக இருக்கும்.
இல்லாவிட்டால் அந்த நாட்களில் விடுமுறை கேட்க வேண்டிய சூழல் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு சில நேரங்களில் அரசே பொது விடுமுறையை அறிவித்துவிடும். அது போல் சில முக்கிய பண்டிகைகளின் போது அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும்.

வார விடுமுறை
விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளை ஈடு செய்ய வேறு ஒரு வார விடுமுறை நாளில் பணி நாளாக அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. இதனால் வெளியூர் செல்வோர் நலன் கருதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

தீபாவளி பண்டிகை
அதை ஏற்ற தமிழக அரசு தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 5ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 20-ஆம் தேதி பணிநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4 நாட்கள்
இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்களிலும் விடுமுறை என்பதால் மகிழ்ச்சியாக சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு ஊழியர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களும் தயாராகி வருகிறார்கள். கொரோனா காலம் என்பதால் ஊருக்கு செல்லும் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேம்பாலம் திறப்பு
தற்போது மேம்பாலங்களும் திறக்கப்பட்டுவிட்டால் முன்பு போல் பண்டிகை கால கூட்ட நெரிசல் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு செல்வோர் சீக்கிரமாகவும் நிம்மதியாகவும் செல்ல நேரிடும். துணிக் கடைகள், பட்டாசுக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications