சென்னையில் 2 வாரத்திற்கு முழு லாக்டவுன் அவசியம்.. தமிழக அரசு அமல்படுத்துமா?.. என்ன செய்யணும்?
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வரும் நிலையில் 2 வாரங்களுக்கு முழு லாக்டவுன் அறிவிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் கோரி வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் அமலில் உள்ள லாக்டவுனில் 5ஆவது கட்டம் அமல்படுத்தப்பட்ட போது தமிழக அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 1,927 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் சென்னையில் மட்டும் 1,390 பேராகும். இதுவரை சென்னையில் 25,937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை
தமிழகத்தில் கடந்த 31-ஆம் தேதி முதல் நேற்றைய தினம் வரை சுமார் 11 நாட்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000-த்தை தாண்டியுள்ளது. தமிழக பாதிப்பில் சென்னையில்தான் 70 சதவீத பாதிப்பு உள்ளது. இது சென்னைவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா எண்ணிக்கை
மேலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பேருந்து இயக்கம், கடைகள் திறப்பு உள்ளிட்ட தளர்வுகளை தமிழக அரசு அறிவித்ததை மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரிக்கவில்லை. மாறாக இது கொரோனா எண்ணிக்கையை அதிகரிக்கவே உதவும் என்றார்கள்.

கோரிக்கை
லாக்டவுன் போட்ட போதே கொரோனா தொற்று அதிகமாகியுள்ளது, தற்போது தளர்வை ஏற்படுத்துவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சமூகவலைதளங்களில் ஆலோசனைகள் வந்தன. இந்த நிலையில் மேலும் இரு வாரங்களுக்கு சென்னையில் மட்டுமாவது முழு ஊரடங்கு அதாவது 144 தடையுத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆலோசனைகள்
அதிலும் முழு லாக்டவுன் என்பது அவசரமாகவும் அவசியமாகவும் அமல்படுத்தியே ஆக வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவலை கொஞ்சமாவது கட்டுப்படுத்த முடியும். அதுபோல் 15 நாட்கள் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டு அந்த காலகட்டத்தில் கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும். இதுதான் நோய் பரவலை கட்டுப்படுத்தும் என்பதை அரசு மறந்துவிட கூடாது என்கிறார்கள் நிபுணர்கள். இந்த ஆலோசனைகளை மாநில அரசு பரிசீலனை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications