சனிக்கிழமைகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை?.. தமிழக அரசு பரிசீலனை
சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமைகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விட தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவலால் மாணவர்கள் வீட்டிலேயே ஆன்லைனில் படித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள். பொதுவாக கோடை வெப்பத்தின் தாக்கத்தால் பள்ளிகளுக்கு ஏப்ரல் 20-ம் தேதி வாக்கில் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.

நேரடி வகுப்புகள்
ஆனால் இந்த முறை பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தாமதமாக திறந்ததால் முழு ஆண்டு தேர்வுக்குள் பாடத்திட்டத்தை முடிப்பதற்காக ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஆன நிலையிலும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் பல இடங்களில் கோடை வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.

நெருப்பு உமிழும்
இதனால் பல இடங்களில் நெருப்பு உமிழும் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது. பிள்ளைகள் பள்ளிகளுக்கு சென்று வீடுகளுக்கு வருவதற்குள் சோர்ந்து விடுகிறார்கள். இதனால் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பெற்றோரிடம் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை
இந்த கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறதாம். இது குறித்து முதல்வருடனும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இனி சனிக்கிழமை விடுமுறை?
முதல்வர் ஒப்புதல் அளித்துவிட்டால் இனி 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். கோடை விடுமுறையும் இந்த முறை மாணவர்களுக்கு குறைவாகவே இருக்கிறது. அதாவது மே 15 தேதி வரை பள்ளிகளில் முழுயாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் இந்த முறை கோடை விடுமுறை குறைக்கப்பட்டு வரும் ஜூன் 13 இல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications