பொன் மாணிக்கவேலுவுக்கு பதவி நீட்டிப்பு இல்லை?.. சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவு
சென்னை: சிலை கடத்தல் வழக்கின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால் அது தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-இல் ஓய்வு பெற்றார். இவரது பணிக்காலத்தில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான சிலைகளை மீட்டெடுத்தார்.

இதனால் ஓய்வுக்கு பிறகும் அன்றைய தினமே இவரை ஓராண்டு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. கடந்த 7 ஆண்டுகளில் இவர் 1,145 சிலைகளை மீட்டெடுத்துள்ளார்.
அது போல் சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திர கபூரை கைது செய்தார். சிலை மோசடி தொடர்பாக இந்து அறநிலையத் துறை அதிகாரிகளையும் அவர் கைது செய்தார். இந்த நிலையில் பொன் மாணிக்கவேலின் பணிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
நேரில் சந்தித்த பொன்னார்.. அழைப்பு விடுத்த எஸ்.வி சேகர்.. ராதாரவியை பாஜக இழுத்தது எப்படி?
தனக்கு பணி நீட்டிப்பு வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் சார்பில் வழக்கறிஞர் பணி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications