சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மழை பெய்தால் இனி பள்ளிகளுக்கு உடனே விடுமுறை கிடையாது.. தமிழக அரசு அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் அரசு புதிய கட்டுப்பாடு- வீடியோ

    சென்னை: மழை பெய்தால் இனி பள்ளிகளுக்கு உடனே விடுமுறை கிடையாது என தமிழக அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது.

    பொதுவாக மழை காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பது வழக்கம். இந்நிலையில் இதற்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

    இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில் மழை பெய்தால் இனி உடனே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது.

    ஈடு செய்ய வேண்டும்

    ஈடு செய்ய வேண்டும்

    மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளித்தால் அதை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க வேண்டும்.

    விடுமுறை

    விடுமுறை

    மழையை பொருத்து பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னர் விடுமுறை அளிக்க வேண்டும். மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில் அல்லது ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும்.

    பணிநாள்

    பணிநாள்

    மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும். திருவிழா போன்றவற்றிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கும் போது ஈடு செய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    விடுமுறை காரணமாக பாடத்திட்டம் எதுவும் பாதிக்காத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இது போன்ற அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Tamilnadu government orders all District collectors that no school should be suddenly declared as holiday after rain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X